சொந்த வீடு யோகம் மற்றும் புத்திர பாக்கியம் அருளும்... ஆனி கிருத்திகை.! - Seithipunal
Seithipunal


ஆனி கிருத்திகை:

பொதுவாக முருகனை வழிபடுவதற்கு உரிய சிறந்த மாதங்களாக வைகாசி, கார்த்திகை மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுக்கு இணையாக ஒரு அற்புதமான முருக வழிபாட்டிற்குரிய தினமாக ஆனி மாத கிருத்திகை தினம் இந்த வருடம் ஜூன் 25ஆம் தேதி சனிக்கிழமை (நாளை) வருகிறது. இந்த கிருத்திகை தினத்தில் எவ்வாறு முருகனை வழிபட்டால் எத்தகைய பலன்களை பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆனி கிருத்திகையில் பொதுவாக முருகனுக்கு விரதம் மேற்கொண்டு வழிபடுபவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

முருகப்பெருமானின் முழுமையான ஆற்றல் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமானின் படத்திற்கு செந்நிற ரோஜா பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும். மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் ஏழை மக்களுக்கு கீரை சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை அன்னதானம் செய்வது நன்று.

வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், முருக காயத்திரி மந்திரம், மூல மந்திரம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு கீரை சாதம், பச்சை நிற இனிப்புகள் போன்றவற்றை நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

இவ்வாறு கிருத்திகையன்று முருகனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படுகின்ற பாதக பலன்கள் நீங்கும். பிறருடன் ஏற்பட்ட பகை விலகி சமாதானம் உண்டாகும். உடன்பிறந்த சகோதரர்களுடனான சொத்து பிரச்சனைகள் நீங்கி சுமூக தீர்வு ஏற்படும். பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்ட மந்தநிலை நீங்கி மிகுந்த சுறுசுறுப்புடன் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரங்களில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

ஆனி கிருத்திகை நாளில் முருகன் வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு சொந்த வீடு அமையும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு மனம் குளிரும் வகையில் நல்ல செய்தி தேடி வரும். வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aani kruthigai special for puthira bakiyam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->