ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி.. சங்கடங்கள் தீர.. விநாயகரை வணங்குவோம்..!! - Seithipunal
Seithipunal


சங்கடஹர சதுர்த்தி... விநாயகரை வணங்கி சங்கடங்களிலிருந்து விடுபடுவோம்..!!

விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிக சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றியடையும்.

இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.

அனுமன் சீதையை கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது, பாண்டவர்கள் துரியோதனனை வென்றது போன்றவை நிகழ்ந்ததும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையால்தான்.

ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி தரும் பலன்கள் :

ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் தடை, தாமதங்கள் போன்றவை நீங்கும்.

புதிதாக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

திருமண தடைகள் நீங்கி இனிதே திருமணம் நடைபெறும்.

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

வேலை தேடுவோருக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கப் பெறுவார்கள்.

தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருகும்.

ஆடி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் கேது தோஷம் நீங்கும்.

குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை அகலும்.

தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadi Month sangadahara chathurthi special


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->