இன்றைய (26.05.2019) ராசிபலன்!! இன்று உங்களுக்கு என்ன நடக்கும்!! - Seithipunal
Seithipunal


மேஷம்: மேஷ ராசி அன்பர்களே!! இன்று உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய நண்பரோ, அல்லது உறவினரோ தானாக தேடி வந்து பேசுவர். வியாபாரத்தில் சில புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தினால் நன்மை உண்டு. வேலையில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும். 

ரிஷபம்: ரிஷபராசிக்காரர்களுக்கு இன்று புதுப்புது சிந்தனைகள் தோன்றக்கூடிய நாள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க நினைப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து புதிய திட்டங்களை செயற்படுத்த நினைப்பீர்கள். அதிகாரிகள் வலிய வந்து புதிய உதவிகளை செய்ய முயல்வார்கள். 

மிதுனம்: தாயாரின் உடல் நலத்தை கண்காணிக்க வேண்டும். பழைய பிரச்சனைகள் தீரக்கூடிய நாள். சில வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உழைப்பால் உயர முடியும். வியாபாரத்தை பொறுத்தவரை சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில புதிய உரிமைகள் கிடைக்கலாம். 

கடகம்: கடகராசி அன்பர்களே! சில முடிவுகளை மிகவும் கறாராக எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் சற்று அதிகமான தொகை கிடைக்கும். சகோதர சகோதரிகள் உதவியாக இருப்பர். வேலைக்கு செல்லும் இடத்தில் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கக்கூடும். வெற்றிக்கு உகந்த நாளாகும். 

சிம்மம்: ராஜபாதையில் எப்போதும் பயணிக்கும் சிம்ம ராசிக்காரர்களே!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியுடன் செல்லக்கூடியது. புதிய உறவுகளால் நன்மை ஏற்படும் நாளாகும் இது. குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பம் விலகக்கூடிய நாள். கேட்ட இடத்தில் நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் இன்று நல்ல யோகம் கிடைக்கும். 

கன்னி: கன்னிராசிக்காரர்களே! உங்களது ராசியில் சந்திரன் தொடர்வதால் சில முக்கிய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களாகவே செய்து முடிப்பது நன்மையை அளிக்கும். இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சில முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது. விட்டு கொடுத்து போக வேண்டிய இடத்தில் சற்று விலகி இருங்கள். அனாவசியமான பேச்சுக்களை தவிர்க்கவும். 

துலாம்: இன்று வியாபாரத்தில் போட்டியை சமாளிக்க வேண்டிய நாள். உங்களை தயார் படுத்தி கொள்ளவும். யாருக்கும் சாட்சி கை எழுத்து போடுவதை தவிர்க்கவும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரியால் சஞ்சலங்கள் வரக்கூடிய நாள் அதிகம் அலைச்சல் ஏற்படும். 

விருச்சிகம்: பழைய கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். வியாபாத்தில் மேற்கொள்ளவேண்டிய புதிய விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படக்க்கூடிய நாள். உங்களுக்கு இது சிறப்பான நாளாக அமையக்கூடும். 

தனுசு: இன்று உங்கள் உதவியால் பிறருக்கு நன்மை ஏற்பட கூடும். குழந்தைகள் கேட்டதை வாங்கி தர வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை பழைய வாடிக்கையாளர்கள் தேடி வரும் நாள். உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். சாதனை புரிய ஏதுவான நாள். 

மகரம்: கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனை விளக்க சுமுகமான நாள். கொடுத்த கடனை வாங்க முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யக்கூடிய நாள். உத்யோகத்தில் இன்று திருப்தியான சூழல் ஏற்ப்படும். விலகி சென்றவர்கள் தானாக வந்து பேசுவார்கள். 

கும்பம்: இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதனால், சில முயற்சிகள் தள்ளி போகக்கூடும். தேவையற்ற சில விஷயங்கள் தானாக வந்து தலையில் உக்காரும். முடிந்தளவு பிறர் விவகாரங்களில் இன்று மூக்கை நுழைக்காமல் இருப்பது. அடிதடியில் இருந்து உங்களை காக்கும். மிக அதிகமாக சாமர்த்தியமாக பேசுபவர்களை இன்றைய சூழலில் தள்ளி வையுங்கள். உங்களுக்கு ஆபத்தை கொடுக்க கூடியவர்களாக மாறுவர்கள். நீங்கள் மிக கவனமாகவும், பொறுப்ப்பாகவும் செயல்பட வேண்டிய நாள். 

மீனம்: குடும்பத்தி குதூகலம் உண்டாகும் நாள். சுபகாரியங்கள் நடைபெற பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். சகோதர ஒற்றுமை விலங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க கூடிய நாளாக இது அமையும். திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய நாளாகும்.  

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

29.05.2019 today rasipalan


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal