தினம் தினம் திருநாளே... இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புகழ் நிறைந்த நாள்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். வாழ்க்கை துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவு மேம்படும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். கனிவு நிறைந்த நாள்.

ரிஷபம்:

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவி கிடைக்கும். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும். அலைபாயும் சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.

மிதுனம்:

நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

கடகம்:

தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

சிம்மம்:

நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். மனதில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

கன்னி:

வாழ்க்கை துணைவருடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

துலாம்:

துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரம் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நிம்மதி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் சாதகமாகும். சிந்தனைகளில் மாற்றமான போக்கு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். திருப்தி நிறைந்த நாள்.

தனுசு:

எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

மகரம்:

அரசு சார்ந்த செயல்பாடுகள் சில அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கும்பம்:

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.  புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  ஆர்வம் நிறைந்த நாள்.

மீனம்:

உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். கவனக்குறைவினால் சில அவப்பெயர்கள் ஏற்படும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். தடைகள் குறையும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 jun 2022 rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->