இன்று... இந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தான்... இன்றைய ராசிபலன்கள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்: 

குடும்பத்தில் இருந்துவந்த தன நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

ரிஷபம்:

உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும், அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மிதுனம்:

உலக வாழ்வியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றமும், பேச்சுக்களில் அனுபவமும் வெளிப்படும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த  செய்திகள் கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆதாயம் மேம்படும் நாள்.

கடகம்:

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த இழுபறியான நிலைகள் குறையும். தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்:

புதுவிதமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கால்நடைகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.

கன்னி:

சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை வெளிப்படும். மகிழ்ச்சியான நாள்.

துலாம்:

புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்:

சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத பயணங்களால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவுகள் எதிர்பார்த்த அளவில் இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் செல்வதற்கான சூழல் அமையும். இலக்குகள் பிறக்கும் நாள்.

தனுசு:

நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றி கிடைக்கும். சிந்தனை வளம் மேம்படும் நாள்.

மகரம்:

முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றும். எந்த செயலையும் நிதானத்துடன் மேற்கொள்வது நல்லது. அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல் உண்டாகும். வியாபார பணிகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நடைபெறும். அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். 

கும்பம்:

புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் ரீதியான பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

மீனம்:

சகோதரர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். புதுவிதமான காதணிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 jan rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->