தாழ்ந்து போக விரும்பாத ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு ராசிப்பலன்.!  - Seithipunal
Seithipunal


யாரிடமும் தாழ்ந்து போகாமல் எப்போதும் தனக்கென்ற பாதையில் பிடிவாதமாக செல்லும் தனுசு ராசி அன்பர்களே.!

இந்த வருடம் உங்களுக்கு சிறந்த ஆண்டாக இருக்கும். புத்துணர்ச்சி பெறக்கூடிய காலமாக இந்த வருடம் இருக்கும்.‌ ஆனால் பிடிவாதம் மற்றும் சற்றே ஒதுக்கி வைத்து பெரியவர்களின் யோசைனைப்படி நடந்தால் இந்த வருடம் 'நல்ல காலம் பிறந்தாச்சு, என்றே அர்த்தம் கொள்ளலாம்.

நீண்ட காலமாக உறவு முறையில் உள்ள குழப்பங்கள் நீங்கி சுமூகமாக வாழ இந்த வருடம் அமைந்திருக்கிறது.
சினிமாத்துறை, ஊடகத்துறை போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்ல தொடக்கமாக புதுப்புது திட்டங்களுடன் ஆரம்பிப்பதின் மூலம் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

நீண்ட நாள் பிரார்த்தனைகள், திருமணம் கைக்கூடுதல், குழந்தை பிறப்பு முதலிய நற்காரியங்கள் நடந்தேறும் வருடமாக 2023 அமைந்திருக்கிறது.

வேலையில்லாமல் இருப்பவர்கள் வேலையில் மாற்றம், பண நெருக்கடி, பண முடக்கம் முதலிய தடைகள் எல்லாம் தகர்ந்து இந்த வருடம் முத்திரை பதிக்கக்கூடிய காலமாக 2023 அமைந்திருக்கிறது.

பயணம் மேற்கொள்வதில் அதிக கவனம் மற்றும் எச்சரிக்கை உணர்வோடு வாகனத்தில் செல்லவும். நீண்ட தூர பயணங்களை இந்த வருடம் ஒத்தி போடுவது நலம்.

அனைத்து ராசிக்காரர்களுக்கும், தெய்வ அருளும் கிரகங்களின் உதவியுடனும் பிறக்க போகும் 2023-ம் ஆண்டு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 new year thanusu Rasipalankal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->