துடிப்பும் வேகமும் கொண்ட ராசிக்காரர்களுக்கு 2022 புத்தாண்டு ராசிபலன்கள்.! - Seithipunal
Seithipunal


2022ஆம் வருடமானது மேஷ ராசி அன்பர்களுக்கு பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பொன்னான வருடமாக அமையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளும், அதை சார்ந்த முயற்சிகளும் அதிகரிக்கும். உறவினர்களின் வகையில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வீடு, மனைகளை விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும்.
பொருளாதாரம் :

தனவரவுகள் தேவைக்கேற்ப கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களின் மீதான செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்புகளை மேம்படுத்த இயலும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் தீர்க்கமான முடிவுகளும், ஆலோசனைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு :

பெண்களுக்கு பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையாக இருப்பதன் மூலம் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் பலதரப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கு முன்பு நபரின் தன்மையை அறிந்து செயல்படவும்.
மாணவர்களுக்கு:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு :

வியாபார பணியில் இருந்துவந்த மந்தமான சூழ்நிலைகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பொறுமையுடன் செயல்பட்டால் சாதகமான சூழல் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் மூலம் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும்.
கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் புதிய வியூகங்களை அமைக்கும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று செயல்படவும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.
நன்மைகள் :

செயல்பாடுகளில் வேகத்தையும், எண்ணங்களில் புதுவிதமான கண்ணோட்டங்களையும் உருவாக்கி புதிய அத்தியாயத்தை உருவாக்க இருக்கின்ற மேஷ ராசி அன்பர்களுக்கு நித்ராவின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கவனம் :

பதறாத காரியம் சிதறாது என்பது போல எந்தவொரு செயலிலும் வேகத்தை விட விவேகத்துடன் இருப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
வழிபாடு :

திருச்செந்தூரில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும், விவேகமும் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 horoscope


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->