யூட்யூப் நிறுவனத்தின் அதிரடி.! இது போன்ற வீடியோக்கள் நீக்கம்!!
youtube may remove those videos
சமூக வலைத்தளங்கள் பலவற்றில் ஒரு இனம் உயர்ந்தது, மற்றொறு இனம் தாழ்ந்தது போன்ற சர்ச்சையை கிளப்பும் பல வீடியோக்கள் அதிகமாக வலம் வருகின்றன. யூடியூப் நிறுவனம் இது போன்ற வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுபற்றி யூட்யூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "யூடியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையை கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமலுக்கு வந்துவிடும்." என அதில் கூறப்பட்டுள்ளது.
யூடியூபில் நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல் நேரலையாக ஒளிபரப்பானது. இதையடுத்து, சமூக வளைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என உலக தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். எனவே, பல சமூக வலைத்தளங்கள் தாமாகவே முன்வந்து இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
English Summary
youtube may remove those videos