உலகமே அச்சப்படும் விஷயம்.. மதுவாங்க கோடுபோட்டு வழிவிடும் டாஸ்மாக்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 182 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 246,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,049 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

மருத்துவ நிபுணர்களும் இதற்கான மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் பரவிய கரோனா வைரஸ் 206 பேருக்கு பரவியுள்ளது. மேலும், 5 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக எடுத்து கலாய்த்து தள்ளும் தமிழக நெட்டிசன்கள் கரோனா வைரஸையும் விட்டுவைக்கவில்லை. உலக நாடுகளே பயந்து நடுங்கிக்கொண்டு இருந்த வேலையில், தமிழக நெட்டிசன்கள் பதிவு செய்த விடியோவை பார்த்து தமிழகமே சிரித்தது. 

இது தொடர்பான பல்வேறு வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வந்த நிலையில், தற்போது கரோனாவை செல்ல சொல்லி பாட்டு பாடியது வைரலாகி வருகிறது. இந்த பாட்டில் மீசைக்கார நண்பா பாடலையும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் உள்ள "தில்லானா தில்லானா" பாடலையும் மாற்றி அமைத்து பாடல் வரிகள் தயார் செய்து பாடி வெளியிட்டுள்ளனர்.

மேலும், தற்போது கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் சில உத்தரவுகளை அந்தந்த மாநில அரசு உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. பார்கள் மட்டும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்களுக்கு தங்கு தடையின்றி மது கிடைத்து வரும் நிலையில், மதுபான கடைக்கு வரும் நபர்கள் வரிசையாக செல்ல மதுபான கடைகளின் சார்பாக வரிசை கோடுகள் குறிப்பிட்ட இடைவெளியில் போடப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக மது விற்பனை தொடர்ந்து வருகிறது. உலகமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தான் என் கரோனா என்று பாட்டிலுடன் குடிமகன்கள் திரிந்து வருவது அறியாமையின் உச்சகட்டமா? நோய்க்கான விழிப்புணர்வு இல்லையா? விழிப்புணர்வு இருந்தும் மெத்தனமா? என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wine shop strict rules to get liquor drinks


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->