இதுக்கு தான் MBA  படிக்க கூடாதுனு சொல்றது!! வாட்ஸாப் வைரல் காமெடி!!  - Seithipunal
Seithipunal


தற்பொழுது இணையதள உலகில் பல்வேறு விதமான ஜோக்குகளை நாம் பார்க்க முடியும் அவற்றில் நகைச்சுவை துளிகள் நம்மை சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும். கீழே உள்ள உரையாடல் உங்களை சிரிக்க வைத்தால் நீங்கள் ஞானி., சிந்திக்க வைத்தால் நீங்கள் விஞ்ஞானி என்பதை இறுதியில் முடிவு செய்யுங்கள்!! 

வாட்ஸாப்பில் வைரலான காமெடி பின்வருமாறு:- 

MBA படிச்சஒருத்தன் கிராமத்துக்குபோறான்..

அங்கே ஒருசெக்குமாடு மட்டும் , தனியா செக்கு சுத்திட்டுஇருக்கு..

அவனுக்குஆச்சரியமாஇருக்கு..,

பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயிசாப்பிட்டுட்டு
இருந்தாரு..

அவர்கிட்டகேட்டான்…

MBA :  மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி: அதுபழகினமாடுதம்பி..,அதுவே சுத்திக்கும்..,

 

MBA :  நீங்கஉள்ளேவந்தஉடனே அது சுத்தறதநிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி:  அதுகழுத்திலஒருசலங்கை இருக்குதம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சிகண்டுபிடிச்சிடுவேன்..

MBA : அதுசுத்தறதைநிறுத்திட்டு.,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும்ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடிப்பீங்க..?

விவசாயி:  இதுக்குதான்தம்பி., நான் என்மாட்டை காலேஜூக்கெல்லாம் MBA படிக்க அனுப்பலை..!

இந்த நகைச்சுவை துளியின் இறுதியில் அந்த விவசாயி கூறும் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கையில், ' படிக்காதவர்கள் செய்யும் வேலைக்கும் படித்தவர்கள் செய்யும் வேலைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

படித்தவர்கள் வேலையை சரியாக செய்யாவிட்டாலும், வேலை செய்வது போல் நடித்து முதலாளியை ஏமாற்றி விடுவார்கள், ஆனால், படிக்காதவர்களுக்கு அத்தகைய எண்ணம் தெரியாது' என்று அந்த விவசாயி கூறுவதாக அமைந்துள்ளது. 

என்னதான் படித்தவர்களுக்கு இது கோபத்தை வரவழைக்கும் விஷயமாக இருந்தாலும், ஆனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் தன்னை சுயபரிசோதனை செய்து இந்த பட்டியலில் நாம் இல்லை என மனதை தேற்றிக் கொள்வது சிறந்தது. 

English Summary

whatsapp jokes viral


கருத்துக் கணிப்பு

இன்று நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம்?
கருத்துக் கணிப்பு

இன்று நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம்?
Seithipunal