தேர்தலுக்கு முன்புள்ள தலைவன் - தேர்தலுக்கு பின் உள்ள தலைவர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் நாடாளுமன்றத்தை அலங்கரிக்க மக்களால் அவர்களின் கட்சியை தேர்வு செய்ய கடந்த மாதம் முழுவதுமாக சுமார் ஏழு கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகி வெற்றி பெற்ற கட்சிகள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்றுள்ள காலகட்டத்தில் இணையத்தின் மூலமாக பல விதமான நிகழ்வுகளை நாம் அறிந்தும் தெரிந்தும் வருகிறோம். அந்த வகையில்., இணையத்தளத்தில் பல விஷயங்கள் பயனாளர்களால் பேசப்பட்டு., பகிரப்பட்டு வரும் நிலையில்., தேர்தல் வாக்குறுதிகள் கூறியதையும்., அதனை பின்னர் நிறைவேற்றாமல் நம்மிடமே கீழிருந்து படித்தாலும்., மேலிருந்து படித்தாலும் தேர்தலுக்கு முன்பு - பின்பு என்று வாக்கியங்கள் அமைத்துள்ளது.

இது குறித்த வாசகங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது., அதனை இனி காண்போம். சிந்திக்க மட்டும்...

தேர்தலுக்கு முன்பு:

தலைவர் : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம்.

மக்கள் : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..?

தலைவர் : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம்.

மக்கள் : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...?

தலைவர் :  ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே..

மக்கள் : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...?

தலைவர் : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை.

மக்கள் : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..?

தலைவர் : நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.!

மக்கள் : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..?

தலைவர் : உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை...

மக்கள் : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..?

தலைவர் : ஆம்..

மக்கள் : நீங்கள் தான் எங்கள் தலைவர்.

( தேர்ந்தெடுக்கப்பட்டதின் பிறகு...)

மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்.....

சிரிக்க மட்டும்... என்று இந்த பதிவானது நிறைவு பெறுகிறது. இதன் மூலமாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? அல்லது கானல் நீர்தானா? என்பதை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மூலமாகவே நமக்கு தெரியவரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app viral after election and before result of parliament election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->