வாட்சப், பேஸ்புக்குக்கும் விதிக்கப்படும் தடை..?! வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில, மத்திய அரசுகள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்தது. மேலும், மக்கள் அதிகப்படியாக கூடும் கேளிக்கை விடுதிகள், மது கடைகள், வணிக வளாகங்கள் தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியது. 

அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், சந்தைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அரசு அலுவலகங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து பஸ், ரயில் போக்குவரத்தும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவி வருகின்றது. 

வைரஸ் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும், வைரஸ் சிலர் பரப்பி விட்டனர். கோழிகறி, முட்டை சாப்பிட்டால் கொரோனா இருப்பதை எப்படி எல்லாம் சோதனை செய்யலாம் என்று ஆதாரமில்லாத வீடியோக்களை பலரும் பரப்பி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கின்றனர். 

எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இது குறித்து, அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app facebook may ban


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->