கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது? வாட்ஸாப்பில் வைரலாக நெகிழ்வு கதை!! - Seithipunal
Seithipunal


தற்பொழுது இணையதள உலகில் பல்வேறு விதமான ஜோக்குகளை நாம் பார்க்க முடியும் அவற்றில் நகைச்சுவை துளிகள் நம்மை சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும். 

வாட்ஸாப்பில் வைரலான கதை பின்வருமாறு:- 

ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்...
ஒரு சின்ன குழந்தை (கையில் தூக்கு வாளியுடன்): அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம்...

ஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....

(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே.... (குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்...

நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....

ஹோட்டல் நடத்துபவர்: அட சாப்பாடுதானே சார்....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...அதெல்லாம் குடுத்துடுவாங்க...

என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்....

நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது? ஹோட்டல் ஓனர் இங்கே கடவுள்." என்ன தான் கதை என்றாலும் படிப்போரின் உதவிமனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது பாராட்டக்கூடிய விஷயமாகும். 

நாம் உழைத்து சம்பாதிக்கும் பணம் ஒருபோதும் வீணாக்குவதில்லை. ஏதாவது ஒரு வகையில் நம்மை வந்து அடைவது நிச்சயம். வாழும் வாழ்க்கையில் பிறருக்கு பயன்படும்படி வாழ்வோம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats ap viral story


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->