கோலகலமான கொரோனா பாட்டு.! உங்க அலப்பரை தாங்காம அது சைனாவுக்கே போய்டும் போல..! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் துவங்கிய கரோனா வைரஸ் படிப்படியாக அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. மனித இனத்துக்கே பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரசுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800க்கும் அதிகமாக உயர்ந்து இருக்கின்றது. இதனை கட்டுப்படுத்த வழி இல்லாமல் திகைத்து வருகின்றனர். 

மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இந்த நோய் வரும் முன்பு காக்க முடியும். இல்லையெனில், நோய் பரவுவதை தடுக்க இயலாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தமிழக சமூக வலைதளங்களில் கொரோமா வைரஸ் பாடல்கள், மீம்ஸ்கள் என்று கலாய்த்து வருகின்றனர். 

அந்த வகையில் தல அஜித் நடித்த பரமசிவம் படத்தில் இடம்பெற்று வரும் "ஆசை, தோசை" என்ற பாடலில் "நான் போகாத ஊரே இல்ல.. நான் பொறந்தேன் பத்தூரு காலி.. வளர்ந்தேன் ஜில்லாவை காலி.." என்ற பாடல் வரிகள் கொரானாவிற்கு பொருத்தமாக இருப்பதால் அதனை இணையத்தில் தேடிப் பிடித்து ரசித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viral corona song in social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->