சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தார் போல, ஆப்பு செதுக்கிய திருமா.. அதே பாணியில் பதில் கூறி அசிங்கப்படுத்திய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


இந்து மதத்தினை தாழ்த்தியும், பிற மதத்தை உயர்ந்தியும் பேசும் பழக்கம் திமுக, திக, விசிக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு கொள்கையாக இருந்து வருகிறது. முஸ்லீம் மாதத்தினரின் திருமண விழாவிற்கு செல்லும் மு.க. ஸ்டாலின் இந்துமத திருமணங்கள் குறித்து அவதூறு பேசுவதும், இது குறித்து அந்த திருமண வீட்டாரிடம் கேட்டால், அவரை திருமணத்திற்கு மட்டும் தான் அழைத்தோம். அவர் அரசியலுக்காக திருமணத்தை வைத்து எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்று கூறுவதும் நடந்துள்ளது. 

பல எண்ணிலடங்கா சம்பவங்கள் இதனைப்போன்று நடைபெற்றுள்ளது. இதனைப்போன்று திமுக கூட்டணியில் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் முன்னொரு காலங்களில் பேசாத விஷயங்கள் கிடையாது. ஜாதிய ரீதியாகவும், மத ரீதியாகவும் பல வன்முறையை தூண்டும் வகையில் பேச்சுக்கள் இருக்கும். ஜாதிகள் ஒழிக்க வேண்டும் என்ற பெயரில், இவரின் அவதூறு பேச்சுக்கள் பலவும் இன்று வரை பெரும் கொந்தளிப்பை மக்களிடையே ஏற்படுத்தியது.

தேர்தலில் தகுந்த பதவிக்காக காத்திருந்த திருமாவளவனிற்கு, சிதம்பரம் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தார். தேர்தல் முடிந்ததும் பல வெளிவராத நாடகக்காதல் சம்பவம் நடைபெற்று இருந்த நிலையில், தற்போது இந்து மதத்தை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் இந்துமத பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. 

இது குறித்த வீடியோ காட்சியில், சனாதன தர்மத்தின் படி இந்து மதத்தில் உள்ள அனைத்து பெண்களும் விபச்சாரிகள் என்று பேசியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வரும் நிலையில், எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. இவருக்கு பதில் சொல்லும் விதமாக பலரும் தங்களின் பதில்களை பதிவு செய்து வருகின்றனர்.

மதங்களில் யாருமே ஏற்றத்தாழ்வு என்பதை பார்த்து இல்லை. இந்து - கிறிஸ்துவர் - முஸ்லீம் மூவரும் தங்களுக்கு தெரிந்த மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு கூட, உதவிகள் தேவைப்படும் சூழலில் பாரபட்சமின்றி செய்து வருகின்றனர். அரசியல் சுய இலாபத்திற்காக பிற மதங்களை இழிவுபடுத்தி, பெண்களை அவதூறாக பேசுவதில் பேரானந்தம் கொள்வது போல தங்களின் பேச்சுக்களை நடுநிலை வாதிகள் மற்றும் புரட்சியாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் நபர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பதே நிதர்சனம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan video trending about harassment speech of Hindu Ladies


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->