" எனக்கு வேற வழி தெரியல ஆத்தா " ஆப்பு வாங்குவதில் ஸ்டாலினை மிஞ்சும் உதயநிதி?..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 22 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்கும் பொருட்டு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்தனர். 

சமூகநீதி பேசும் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் ஏதும் வந்ததாக தெரியவில்லை. பொதுவெளியில் பேசும் போதெல்லாம் ஆகா ஓகோவென பிற மதங்களை புகழ்ந்து தள்ளும் திமுக, இந்து மக்களை இகழாமல் இருந்ததே இல்லை. 

இதில், பெரியாரிய கொள்கையை பின்பற்றும் நபர்கள் மற்றும் திராவிடத்தை தூக்கிப்பிடிக்கும் நபர்களின் பேச்சுக்களை கேட்க கூட இயலாத வகையில் அவதூறாக பேசியிருப்பார்கள். பிற மத பண்டிகளைகளுக்கு சகோதரத்துவத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஏகபோக வாழ்த்துக்களும், இந்து மத பண்டிகைக்கு மட்டும் இழிவுபடுத்தும் கருத்துக்களும், கண்டுகொள்ளாதது போல நடிப்பும் என இருந்து வருகிறது. 

இந்த விஷயங்களில் உச்சபட்சமாக தேர்தல் நேரங்களில் திமுக இந்துக்களுக்கு அன்பானவன் என்று கபடநாடகம் ஆடிய பல ஆட்டங்களும் நினைவு வருகிறது. பெரியார் பேசிய உண்மையான விஷயத்தையே பரப்பாத திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள், சிறுபான்மையினரின் வாக்குகள் மற்றும் பரபரப்பிற்க்காக பல சில்மிஷ வேலைகளிற்கு பின்னால் இருந்து தூண்டுகோலாகவும் செயல்பட்டு வருகிறது. 

திரைத்துறையில் திட்டமிட்டே களமிறக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், திரைத்துறை மூலமாக கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற அடையாளத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் பிரபலமடைந்தார். பின்னர் அரசியலில் நுழைந்து, இப்போது அரசியலை 10 விழுக்காடு கூட புரிந்துகொள்ளாது அட்மினை வைத்து பல சர்ச்சை பதிவு, திராவிடத்தை தூக்கிப்பிடிப்பது என இருந்து வருகிறார். 

உதயநிதி திரைத்துறையில் அறிமுகமாகும் காலங்களில் நன்றாக நடிக்கிறாரே என்று கூறிய பலரும், இப்போது இந்த களத்திலும் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்துகிறாரே என்று பேசும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். சில நேரங்களில் உதயமான பேபி, மான்கறி போன்ற விஷயத்திலும் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமானார். 

இப்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு கருத்துக்களே தெரிவிக்காமல் இருந்து வந்து திமுக மீண்டும் நெட்டிசன்கள் கையில் சிக்கியதால், தந்து ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி விநாயகரின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இது அவரது வீட்டில் எடுக்கப்பட்டதா? என்பது குறித்த விபரம் தெரியவராத நிலையில், உங்களின் முட்டுக்கொடுக்கும் நடிப்பு பிரம்மதமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்துக்களில் வசைபாடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalin acts Like a MK Stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->