உலகம் முழுவதும் ட்விட்டர் சேவை பாதிப்பு.. பயனர்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


பல்வேறு நாடுகளில் டுவிட்டர் சேவை இன்று மாலை திடீரென்று முடங்கியுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் உலகம் முழுவதும் பல நாடுகளில் இன்று திடீரென முடங்கியது. இன்று மாலை 5.30 மணி அளவில் உலகம் முழுவதும் டுவிட்டர் சேவையை அணுக முடியவில்லை என்ற புகார்கள் எழுந்தன. 

அதன் பின்னர் சிறிது நிமிடங்களில் (5:46 மணிக்கு) சுமார் 55,000 பயனர்களுக்கு டுவிட்டர் செயல் இழந்ததாக செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான "டவுன்டிடெக்டார்" தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மாலை 6.10 மணி வரை சுமார் 477 டுவிட்டர் கணக்குகள் முடங்கியதாக "டவுன்டிடெக்டார்" தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் மற்றும் இத்தாலியிலும் இன்று பயனர்களுக்கு டுவிட்டர் முடங்கியது. சில நிமிடங்கள் மட்டுமே செயலிழந்த டுவிட்டர் சேவை பின்னர் மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter service affected all over the world today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->