திமுக - டிடிவி மறைமுக பிளான்?.. காங்கிரஸ் இல்லாத திமுக?..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆம் வருடத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்தது. இதனைப்போன்று கடந்த 2011 ஆம் வருடத்தின் சட்டமன்ற தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு சவால் விடுவது நல்லதல்ல என்று திமுகவினர் கோபமடத்தினுள்ளார். 

மேலும், திமுகவை சார்ந்த நபர்களின் உள்அரசியல் பணிக்கு பின்னர் எட்டு தொகுதியில் காங்கிரஸ் வெற்றியைப்பெற்றதாகவும், ராகுல் காந்தியின் பெயரை கூறியே தமிழகத்தில் 39 தொகுதிகள் மக்களவை தேர்தலில் திமுக வெற்றியடைந்து உள்ளதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.  

இதனைப்போன்று மற்றொரு தரப்பில் இருந்து காங்கிரஸ் மற்றும் டிடிவி தினகரன் சின்ன சின்ன கட்சியினால் வெற்றியை அடைய இயலாது. பிரதான கட்சிகளின் வெற்றி வாக்குகளை மாற்றம் செய்துவிடும் என்றும் கூறி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் டிடிவியின் தனி செயல்பாட்டினால் திமுக வெற்றி பெற்றாலும், டிடிவி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வெற்றியடையவில்லை. 

stalin ragul,

இதனைப்போன்றே காங்கிரஸ் வாக்குகள் சேரும் நேரத்தில் திமுக வெற்றியடைய இயன்றது. வேலூரில் நடைபெற்ற மக்களவை தேர்தலை பொறுத்த வரையில், காங்கிரஸ் கட்சி இல்லை என்ற பட்சத்தில், அதிமுக கட்டாயம் வெற்றி பெற்றிருக்கும். தற்போதைய எம்.பி தேர்தல் ராகுலா? மோடியா? என்ற ரீதியில் நடைபெற்றாலும், தமிழகத்தில் ஸ்டாலினா? எடப்பாடியா? என்று நடைபெற்றது. இருப்பினும் காங்கிரசுக்கு 6 விழுக்காடு வரை வாக்கு வங்கி இருந்தது. 

இதனை வைத்துக்கொண்டு காங்கிரஸ் வெற்றிபெற இயலாது என்றாலும், வாக்கு மாற்றத்தினை தீர்மானிக்கும் செயலும் செய்ய இயலும். இதனைப்போன்ற பல சிறு கட்சிகள் கூறிவரும் நிலையில், வரும் தேர்தலில் இதற்கான முடிவுகள் கிடைக்கும். திமுகவை பொறுத்த வரையில் பலமான கூட்டணி இல்லாமல் ஒன்றும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran stain plan to alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->