எவன் அப்பன் வீட்டு காசுல கட்டுனது, எவன் போட்டோ?.. சிக்கிய உதயநிதியை., சின்னாபின்னமாக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெரும்பூதூர் சட்டப்பேரவை தொகுதியின் நிதியில் இருந்து, பொன்மலையை அடுத்துள்ள ஆலத்தூரில் ரூ.6 இலட்சம் செலவில் பயணிகள் நிழற்குடையானது அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சி மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திருவெரும்பூதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி புகைப்படங்கள் அச்சிடப்பட்டது. 

இதில், மு.க. ஸ்டாலினின் புகைப்படத்திற்கு அடுத்தபடியாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த நிழற்குடையினை சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். தற்போது இந்த பயணிகள் நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள உதயநிதி புகைப்படம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது.

தற்போதுவரை எவ்விதமான அரசு பதவி வகிக்காத உதயநிதியின் புகைப்படம், அரசின் நிதியில் அமைக்கப்பட்ட நிழற்குடையில் சுவரொட்டியாக மாற்றப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விஷயம் தொடர்பாக அதிமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் முன்னாள் எம்.பி ப.குமார் கூறுகையில், " அரசு பதவியில் இல்லாத உதயநிதியின் புகைப்படம் அரசு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் எதற்காக வைக்க வேண்டும்?. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்க இருக்கிறோம் " என்று தெரிவித்தார்.

கட்சியில் தந்தையின் பெயரை வைத்து, நிர்வாகிகளை தனக்கு அடுத்தபடியே தந்தையை சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தி வரும் உதயநிதி, இந்த விஷயத்திற்கு நிர்வாகிகள் தன்மீதுள்ள பாசத்தால் செய்திருப்பார்கள், நான் விளம்பரம் செய்ய விருப்பமாட்டேன். திமுக விளம்பர கட்சி கிடையாது என்று தெரிவித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த விஷயம் தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில், " தொகுதியின் நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், அவர் சார்பு கட்சி தலைவர்கள் மக்களுக்காக ஆட்சியில் இருந்து பணிசெய்திருந்தால் மட்டுமே புகைப்படத்தை பதிவு செய்யலாம். 

எந்ததொரு பதவியிலும் இல்லாத உதயநிதி, கட்சிப்பணியை அரசாங்க பணியை போல எண்ணிக்கொண்டா இருக்கிறார்?. நாங்கள் தொகுதிக்காக வரிப்பணத்தை கட்டி, அந்த வரிப்பணத்தை திட்டங்கள் மூலமாக எங்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டங்களில், அரசுக்கு சம்பந்தமே இல்லாத அவர்களின் தந்தை வீட்டு பணத்தில் இருந்து அனைத்தையும் செய்தார் போல புகைப்படத்தை வைத்து இழிவான விளம்பர செயல் " என்று கொந்தளித்து நெட்டிசன்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy DMK Udhayanidhi Poster issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->