இரயில்களில் இருக்கையை பேருந்து போல முன்பதிவு செய்ய முடியாதது ஏன்?..! - Seithipunal
Seithipunal


இரயிலில் நாம் பெரும்பாலும் செல்லும் போது ஜன்னல் ஓரத்தில் உள்ள இருக்கை கிடைக்காதா? என்று புலம்பியிருப்போம். ஆனால், பேருந்துகளில் சென்றால் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் இருக்கையை முன்பதிவு செய்தோ அல்லது நேரடியாக சென்றோ கைப்பற்றுவோம். பேருந்துகளில் உள்ள இவ்வசதி ஏன் இரயிலில் கிடையாது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும்.  

இரயிலில் நமக்கு பிடித்த இருக்கையை தேர்வு செய்ய இயலாமல் போவதற்கு பின்னணியில் பல கரணம் உள்ளது. இரயில் என்பது அதிவேகத்தில் செல்லும் நகர்வு பொருள். இதனை விருப்பத்தின் பேரில் முன்பதிவு செய்தால் சில நேரம் எதிர்பாராத விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பொதுவாக இரயிலை பொறுத்த வரையில் S1, S2, S3 போன்ற பெட்டிகள் இருக்கும். இதில் ஒவ்வொரு பெட்டியிலும் 72 இருக்கைகள் இருக்கும். படுக்கை பெட்டிகளை பொறுத்த வரையில் மேல் படுக்கை, மத்திய படுக்கை மற்றும் கீழ் படுக்கை என்று இருக்கும்.

இவைகளை முன்பதிவு செய்யும் போது மத்தியில் உள்ள இருக்கைகள் முதலில் முன்பதிவு செய்யப்படும். பின்னர் சீரான முறையில் அடுத்தடுத்த படுக்கைகள் பதிவு செய்யப்படும். இரயிலை பொறுத்த வரையில் இரயில் இயக்கத்தின் போது ஏற்படும் புவியீர்ப்பு மைய பாதிப்பால், இரயிலின் சமநிலை பாதிக்கப்படாமல் இருக்க இவ்வாறான முறை பின்பற்றப்பட்டு வருகிறது. 

இறுதி நேரத்தில் பயண சீட்டை இரத்து செய்யும் நபர்களின் இருக்கை நமக்கு கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 ஆக கிடைப்பதும் இதனால் தான். நூறு கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் இரயிலில் S1, S2, S3 பெட்டிகள் முழுவதும் நிரம்பி, S4, S5, S6 காளியாகா இருந்து, இதர இரயில் பெட்டிகளில் சில இடங்களில் மட்டும் இருக்கை பதிவாகியிருந்தால் இரயிலின் வேகம் அதிகரித்தல், குறைதல், நிறுத்துதல் போன்ற சமயங்களில் பிரச்சனை ஏற்படும். விபத்து ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. இதனாலேயே இரயில்களில் இருக்கையை நாம் தேர்வு செய்ய முடிவதில்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train Ticket Booking Format Selection of Seats


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->