இணையத்தில் ட்ரெண்டாகும், #TamilnaduJobsForTamils .!! தமிழக வேலை தமிழருக்கே..!! தேசிய அளவில் ஒலிக்கும் குரல்!!  - Seithipunal
Seithipunal


இணையத்தில் தற்பொழுது #TamilnaduJobsForTamils #தமிழகவேலைதமிழருக்கே என்ற இந்த இரண்டு ஹேஷ்டேகுகளும் இந்திய அளவிலும், சென்னை ட்ரெண்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளன

தமிழக அரசின் வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் மொழி அறியாத வடநாட்டவர்க்கே கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து இணையத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிரது. அதில், தமிழக வேலை தமிழருக்கே, என்று பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி இணையதளம் பயன்படுத்துவோரால், ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதைக் கண்டித்து திருச்சி பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடைபெற்றது.

படித்துவிட்டு பல இளைஞர்கள் தமிழகத்தில் வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் காலத்தில், ரயில்வே துறை உள்ளிட்ட துறைகளில் அதிக காணப்படுவது வடநாட்டினர் தான். திருச்சி பொன்மனையில் ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் எனப்படும் பழகுநர் பணிக்காக நடந்த நேர்காணலில் 1765  பேரில் வெறும் 100 தமிழர்கள் என்றளவிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்வுக்குப் வெற்றிபெற்றோரில் 325 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை. 

எனவே, இதனை கண்டித்து தமிழ்த்தேசிய பேரியக்கம் என்ற இயக்கம் இன்று திருச்சியில் போராட்டம் நடத்தியது. இணையத்திலும், அமைப்பு சாரா பலர் #TamilnaduJobsForTamils #தமிழகவேலைதமிழருக்கே என்ற டாக்குகளை பயன்படுத்தி மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை மீம்ஸ், ட்ரோல்ஸ் வீடியோ ஆகியவற்றை பயன்படுத்தியும் செய்துவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today trending in twitter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->