விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே பிழைப்பாக கொண்ட தமிழக அரசு?.. கொந்தளிக்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் வழியாக  உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, எரிவாயு குழாய் பாதை போடுவது, எண்ணெய் குழாய்கள் பாதை போடுவது போன்ற திட்டங்களால் விவசாயிகளின் சாகுபடி நிலங்கள் பெருமளவு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.  

மேலும், மேற்கூறிய பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து, புலம் பெயர்ந்து செல்லும் நிர்பந்தமும் மத்திய, மாநில அரசுகளால் ஏற்படுகிறது. கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள தேவனகொந்தி வரை அமைக்கப்படும் எண்ணெய்க் குழாய் பாதையை சாகுபடி நிலங்களை பாதிக்காமல் மாற்றுவழியில் அமைக்க வேண்டும் என விவசாயிகள் குரலெழுப்பி வருகிறார்கள். 

தற்போது ஊரடங்கு அமலாகியுள்ள சூழலிலும், இருகூர் - தேவனகொந்தி குழாய் பதிப்பு திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலம் எடுப்பு தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிராக பல அநீதிகள் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்துகிறது. 

கட்டாயம் இவ்வாறான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றால் எத்தனையோ மாற்று வழிகள் இருக்கிறது. விவசாய நிலம் வழியாக நூல் பிடித்தார் போல குழாய் பாதிப்பை அரங்கேற்றிவிட்டு, விவசாய நிலத்தை வைத்து விவசாயம் செய்து பிழைத்து வந்த விவசாயிகளின் வயிற்றில் மத்திய, மாநில அரசுகள் அடிக்க பார்ப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுகிறது. மேற்படி இந்த திட்டத்தை செயல்படுத்தினால், மாற்று வழியில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt ready to commit work irugur - devangonthi Oil Pipeline Construction


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->