சினிமாவுக்கு கிடைத்த அடுத்த ஐஸ்வர்யா ராய்.! அச்சு அசலா அப்படியே இருக்காங்களே.!?  - Seithipunal
Seithipunal


உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 1994 ஆம் வருடத்தில் உலக அழகி பட்டத்தினை வெற்றியடைந்தார். இதன்பின்னர் சினிமாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராய், தமிழ் சினிமாவில் தனது கால்களை பதித்தார். 

இவர் மணிரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகி, பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். இதன்பின்னர் ஜீன்ஸ், இராவணன் போன்ற தமிழ் படத்திலும், இறுதியாக ரஜினியின் எந்திரன் திரைப்படத்திலும் நடித்தார். 

ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் வருடத்தில் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து, இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். இவர் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும், தனது உடல் அழகை கட்டுக்கோப்பாக பார்த்து கொள்கிறார். 

எத்தனை நடிகைகள் வந்தாலும், இவரின் அழகிற்கு ஈடாகாது என்று பெருமையுடன் ரசிகர்கள் கூறிவரும் ணியில், ஈரான் நாட்டினை சார்ந்த மாடல் அழகியான மஹ்லகா ஜாபேரி அச்சு அசலாக இவரை போல உள்ளார். மேலும், இவர் அமெரிக்காவில் இருக்கும் சாண்டியாகோ நகரில் விளம்பரத்திலும் நடித்துள்ளார். 

தற்போது இவர் ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் என்பது போல வளம் வருகிறார். ஜோதா அக்பர் படத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராயினை போல டிக் டாக் விடியோவும் செய்து வெளியிட்ட மஹ்லகா ஜாபேரிவை கண்டுகொண்ட நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராயை போல இருப்பதாக கூறி வருகின்றனர். இவரது புகைப்படம் மற்றும் போட்டோ அதிகளவு வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiktok user be like ishvarya rao


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->