டிக்டாக் வீடியோ செய்த வாலிபர்கள் கைது! போலீஸ் அடுத்த அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான டிக்டாக் செயலி மூலம் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஆடியோக்களை வைத்து வீடியோவாக செய்து பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்தவனம் உள்ளது. இதை பலரும் பொழுதுப்போக்காக நினைத்து செய்து வருகின்றனர். 

இந்நிலையில், சிவகாசி மாவட்டம் துலுக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், தங்கேஸ்வரம், முருகேஷன், குருமதன் ஆகியோர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்திற்கு வாகனத்தில் செல்ல, காவல் துறையின் அனுமதி பெற சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். 

அப்போது சிறுத்தை படத்தில் நடிகர் கார்த்தி, 'இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்' என்று வசனம் பேசும் காட்சியை காவல் நிலையம் முன், டிக் டாக் செயலி மூலம் வீடியோவாக செய்து அந்த இளைஞர்கள் இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோவை காவல்துறையினரின் பார்வைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், டிக்டாக் வீடியோ செய்த 4 வாலிபர்கள் மீதும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், காவல்துறையை அவமதித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tic tok video in 4 boys arrested


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal