பட்டி தொட்டியெங்கும் வீசும், 'தெம்மா தெம்மா' பாடல்.. என்ன காரணம்? இதோ முழு விவரம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 24ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய Rain Rain come again என்ற திரைப்படத்தில் தெம்மா தெம்மா தெம்மாடி காத்து என்ற பாடல் வெளியாகியது. ஆனால் இந்த பாடல் வெளியாகிய காலகட்டத்தில் இது யாராலுமே கண்டு கொள்ளப்படவில்லை. 

தற்போது இணையத்தில் இந்த பாடல் படு வைரலாகி வருகின்றது. கேரளாவை சேர்ந்த ஹாஸ்டல் மாணவிகள் சிலர் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டனர். இந்த பாடலுக்கான அசைவு காட்சிகள் வேறு மாதிரியாக இருந்தாலும் இது பலரிடம் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தப் பாடலின் டியூன் மற்றும் மாணவிகள் போட்ட ஸ்டெப் அனைவருக்கும் பிடித்து விட இதை அனைவரும் ரீல்ஸ் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். இது ஜோஷ் போன்ற ஆப்களில் வரவேற்பை பெறுவதால் வெளிநாட்டினரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட ஆரம்பித்தனர். 

கடைவீதிகள், வகுப்பறை, வீடு, விளையாட்டு மைதானம், அலுவலகம், பூங்கா, சாலை என்று எந்த இடங்களையும் விட்டு வைக்காமல் இளம் தலைமுறையினர் இந்த பாட்டுக்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர். 

சமீபத்தில் வெளியாகிய வாத்தியின் ஒரு தலை காதல் பாட்டு மற்றும் வாரிசு படத்தின் ரஞ்சிதமே உள்ளிட்ட பாடல்களை கூட இந்த தெம்மா தெம்மா பாடல் பின்னுக்கு தள்ளி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

themma themma song viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->