சோதனைக்கு வந்த அதிகாரிகளை சுழற்றியடித்த காவல்துறை..! பரபரப்பு வீடியோ காட்சி வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 5 மணிவரை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தேவையற்று மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவு அனாவசியமாக வெளியே சுற்றி வருகின்றனர். மேலும், இளைஞர்கள் அனாவசியமாக சுற்றி வருகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைக்க அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், இந்த சூழ்நிலையை உபயோகம் செய்து அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது என்பதால், வட்டாட்சியர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மளிகை கடையில் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த அதிகாரிகளை பொதுமக்கள் கூட்டமாக இருக்கிறார்கள் என்று எண்ணி காவல் துறையினர் தாக்கியது மற்றும் பின்னர் நிலையை புரிந்து கொண்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ எங்கு காட்சிப்படுத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகாத நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media video trend about police attack inspection officers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->