ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி..  9 நிமிடம்... மோடியின் இராஜதந்திரத்திற்கு பின்னால் இருப்பது என்ன?..! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு நன்றி கூறும் வகையில் மக்களை மாலை 5 மணிக்கு வீட்டினை விட்டு வெளியே வந்து நன்றி கூறி கைதட்ட பிரதமர் மோடி கூறினார். 

இதனைப்போன்று தற்போது வரும் ஞாயிறன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் வீட்டு விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்கு போன்ற விளக்குகள் மூலமாக ஒளியை ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளார். இது எதற்கு என்று பல சுவாரசிய விளக்கங்கள் உலா வரும் நிலையில், சுவாரசியமாக வாட்ஸப்பில் வைரலாகும் பதிவு குறித்து கீழே காண்போம்.

"மோடிஜி ஏன் தெரியுமா வரும் ஞாயிறன்று இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்கள் செல்போனை ஆன் செய்து ஆட்ட சொன்னார்??? இதில் தான் இருக்கிறது ராஜதந்திரம்!!!

செல்போனில் இருந்து ஊதா நிற ஒளி பரவும். இது சாதாரண வெளிச்சம் அல்ல. Ultra Vilot Ray's இதை தொடர்ந்து நாம் பார்க்கும் போது நமது கண்களை பாதிக்கும். அது போல வைரஸ்களுக்கு புற ஊதா கதிர்கள் எதிரி. (இது உண்மை!)

நாம் இந்தியர்கள் அனைவரும் சுமார் நூறு கோடி மக்கள் ஒரே நேரத்தில் செல்போனை ஆன் செய்து காட்டும் போது இந்திய நிலப்பரப்பு முழுவதும் புற ஊதா கதிர்கள் பரவி கொரோனா வைரஸை அழித்து விடும். 

ஏன் ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும். இன்றே இதை செய்யலாமே என்ற கேள்வி உங்களுக்கு எழும். அங்கு தான் இருக்கிறது நமது ரா யோகியின் ராஜதந்திரம்!!!

வரும் ஞாயிறன்று துவாதசி, அன்று இரவு ஒன்பது மணியிலிருந்து ஒன்பது நிமிடங்கள் வரைக்கும் எப்பேர்ப்பட்ட கொடிய வைரஸாக இருந்தாலும் மிகவும் பலவீனமாக வலுவிழந்து இருக்கும்.

இந்த நேரத்தில் நாம் சுமார் நூறு கோடி மக்களும் நூறு கோடி செல்போன்கள் மூலம் புற ஊதா கதிர்களை பிரபஞ்சத்தில் செலுத்தும் போது கொரோனோ வைரஸ் முற்றிலுமாக அழிவது உறுதி!! " என்ற உரையாடல் வாட்சப் செயலியில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social media trend about modi light 9 pm 9 min Sunday


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->