தங்கள் கோவணம் அவிந்துபோனதுக்கூட தெரியாமல்... நீங்கள் சிரிக்கலாமா? ஸ்டாலினுக்கு பதிலடி! #இணையசிதறல் - Seithipunal
Seithipunal


அதிமுக பாமக கூட்டணியை தொடர்ந்து விமர்சித்து வரும் முக ஸ்டாலினுக்கு சமூக வலைதளத்தில் வந்த காரசாரமான பதிலடி, படிப்பதற்கு ஒரு மாதிரி இருந்தாலும், யதார்த்தமான உண்மை இது தானே! அரசியல் என்பதற்காக தன் நிலை மறந்து விமர்சிப்பது என்பது தவிர்க்க வேண்டிய ஒன்று என்பதனை ஒவ்வொரு அரசியல்வாதிகளும் உணர வேண்டும். 

நேற்று ஒரு பிரச்சார கூட்டத்தில் துண்டு சீட்டை பார்த்து மு.க.ஸ்டாலின் "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மோசமாக திட்டிவிட்டு அவர்களோடு கூட்டணி வைக்க பாமகவிற்கு வெட்கமாக இல்லையா? சூடு சுரணை இல்லையா?" என பேசிக்கொண்டிருந்தார்.

மேடையில் பேசுவதற்கு முன்பாக கண்ணாடி முன் நின்று ஸ்டாலின் இதை பேசிப்பார்த்திருந்தால் கொஞ்சம் நிதானித்து பேசியிருப்பார்.

வைகோவை தனக்கு பின்னால் வைத்துக் கொண்டு ஸ்டாலின் இதை பேசுவதுதான் காமெடி.

"இந்த பொழப்பு பொழக்கிறதுக்கு பதில் கருணாநிதியும் ஸ்டாலினும் 'அந்த' தொழில் செய்யலாம். அதான் , அந்த உலகத்தின் பழமையான தொழிலை செய்யலாம்" என வைகோ பேசிவிட்டு,  சட்டென்று சுதாரித்து "நான் சொன்னது பீப்பீ ஊதுற தொழில். அவங்க பரம்பரை தொழிலான நாதஸ்வரம் ஊதப்போலாம்னு சொன்னேன்" என சாதிய ரீதியாக கருணாநிதியையும், ஸ்டாலினையும் பேசியவர் வைகோ.

பச்சையாக சாதியை சொல்லி திட்டிய வைகோவை கூடவே வைத்துக்கொண்டு எதிர்காற்றில் காரி துப்ப ஸ்டாலினால் மட்டுமே முடியும்.

இதற்கு உடன்பிறப்புகள் கொடுத்த பதிலடி அதைவிட கடுமையான  'செருப்பு'

காவேரி மருத்துவமனைக்கு வந்த வைகோ மீது செருப்பை வீசி விரட்டியடிக்க, காரில் தப்பிப்போன வைகோவை அந்த தெருமுனைவரை விரட்டி சென்று செருப்பை வீசிவிட்டு, சிக்சர் அடித்த தோனி போல பெருமிதத்தோடு உடன்பிறப்புகள் பேட்டி கொடுத்தார்கள்.

உ.பிகளின் செருப்பு வீச்சில் தப்பிப்போன வைகோ பாதுகாப்பான இடத்துக்குப்போய் பத்திரிக்கையாளர்களை  கூட்டி "மு.க.ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில்தான் என் மீது செருப்பு வீசினார்கள். செருப்பை வீச சொன்னதே ஸ்டாலின்தான்" என பதட்டத்தோடு பேட்டி கொடுத்தார்.

இதெல்லாம் இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நடந்ததுதான். 'பீப்பீ ஊத சொன்னவரும்' 'செருப்பால் அடித்து விரட்ட சொன்னவரும்' கூட்டணி சேர்ந்துகொண்டுதான் எதிராளியை பார்த்து சிரிக்கிறார்கள் தங்கள் கோவணம் அவிந்துபோனதுக்கூட தெரியாமல். . . . . . 

முகநூல் பதிவு : நம்பிக்கை ராஜ்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media post about mk stalin speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->