சமூக வலைத்தளங்களால் நாம் மறந்து போன விஷயங்கள்.! திரும்பி பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்கள் வந்த பின்னர் நமது வாழ்க்கை முறையே மாறிப்போய் விட்டது என்று தான் கூற வேண்டும். பல விஷயங்களை மறந்து வருகிறோம். அன்றாட வாழ்வின் சுவாரஸ்யங்கள் பலவற்றை மறந்து, நாம் இயந்திரத்தனமான மகிழ்ச்சி என்ற மாயையைக்குள் சிக்கி கொண்டோம் என கூறினால் அது மிகையாகாது. 

அப்படி ஒருவர் உணர்ந்து எழுதிய வார்த்தைகள் தான் கீழ்க்காணும்  வரிகள்: 

டிவி என் வீட்டிற்கு வந்தபோது. ... புத்தகங்களை எப்படி படிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.  

கார் என் வீட்டிற்கு வந்தபோது..... ​​
நான் எப்படி நடக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.  
என் கையில் மொபைல் கிடைத்தவுடன்..... கடிதங்களை எப்படி எழுதுவது  என்பதை மறந்துவிட்டேன்., 

என் வீட்டிற்கு கணினி வந்தபோது......, . ​​
எழுதவதை மறந்துவிட்டேன்.

ஏசி வந்ததும்......
இயற்கைக் காற்றை மறந்து விட்டேன். 

நகரத்திற்கு வந்தவுடன்...
அழகு நிறைந்த கிராமத்தை மறந்துவிட்டேன்.  

வங்கிகள் மற்றும் கார்டுகளை கையாளுவதால்...
பணத்தின் மதிப்பை மறந்துவிட்டேன்.  

வாசனை திரவியத்தை பயன்படுத்தியதால்...

பூக்களின் மனத்தை மறந்துவிட்டேன்.  

துரித உணவு வருவதால்...
பாரம்பரிய உணவு வகைகளை சமைக்க மறந்துவிட்டேன்.

சம்பாதிக்க சுற்றி, சுற்றி ஓடுவதால்.....
ஓடுவதை எப்படி நிறுத்துவது என்பதை மறந்துவிட்டேன்.  

கடைசியாக வாட்ஸ்அப் கிடைத்ததும்....

எப்படி பேசுவது
என்பதையே.....

மறந்துவிட்டேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media may change human life


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->