சுகாதார பணியாளர்களின் குணத்தையும், வலிகளை உணர்த்தும் தூய்மை காவலர்...!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பல தொழில்கள் அதிரடியாக முடக்கப்பட்டது. பல கோடிக்கணக்கான இலாபம் பார்த்த நிறுவனங்கள் எல்லாம் தத்தளித்து வருகிறது. 

உலகம் எப்படி இயங்கினாலும், சில பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஓய்வு என்பது சிலமணிநேர உறக்கத்தில் கனவில் நனவாவதுதான் என்பதே நிதர்சனம். உலகளவில் பல துறைகள் ஓய்வின்றி இயங்கி வந்தாலும், ஒரு நாள் இந்த துறை இயங்கவில்லை என்றால் தெருவெல்லாம் நாறிப்போகும் என்று சொல்லும் அளவிற்கு, தூய்மை பணியாளர்களின் பணியானது இன்றளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

தூய்மை பணியாளர்களை பொறுத்த வரையில், அவர்களால் பல கோடிவருமானம் வரவில்லை என்று கூறினாலும், ஒருநாள் அவர்கள் இல்லையேல், ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவிற்கு மூக்கை மூடாமல் செல்ல இயலாது. நாம் நமது வீட்டில் ஏற்படுத்தும் குப்பைகள் மக்கி வீதியில் உள்ள குப்பை தொட்டியிலோ அல்லது வீதியிலோ வீசி செல்வதை, எவ்விதமான வருத்தமும் இல்லாமல் அப்புறப்படுத்தி, நமது சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யும் மகத்தான பணியை சத்தமே இல்லாமல் செய்து வருகின்றனர். 

சுகாதார பணியாளர்களின் தேவையை இன்றளவில் உலகம் மெல்ல மெல்ல உணர துவங்கியுள்ளது. இதற்கு ஆதாரமாக பெண்மணியொருவர் சுகாதார பணியாளருக்கு பாத பூஜை செய்தது, அமைச்சர் சுகாதார பணியாளர் காலில் விழுந்தது என்று கூறிக்கொண்டே செல்லலாம். தூய்மை பணியாளர்களின் குணங்கள் மற்றும் அவர்களின் வலிகள் தொடர்பான குறும்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பெரும்பாலும் குறும்படங்கள் என்பது முதன் முதலில் எடுக்கப்படும் பட்சத்தில், மக்களை எளிய வகையில் கவரும் விஷயமாகவும், ட்ரெண்டிங்கில் செல்லும் விஷயமாகவும் தேர்ந்தெடுப்பார்கள். அதுபோன்று இல்லாது தங்களின் முதல் பணியே மக்களுக்கான பணியாக துவக்கி குறும்படம் இயக்கப்பட்டுள்ளது. இக்குறும்படம் துவக்ககால நபர்களால் பதிவு செய்யப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க காட்சிப்பதிவுகள் மற்றும் வசனங்களின் இணைப்பின்மை போன்ற குறைகள் இருந்தாலும், தூய்மை காவலர் போன்று தனது பணியை சரியாக செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Short Film trend about Thueymai Kavalar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->