தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்காக, சேவாக் வெளியிட்ட அறிவிப்பு! நெகிழ்ச்சியும், பாராட்டும்!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர் வீரேந்திர சேவாக். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒரு சர்வதேச பள்ளியும், பயிற்சி நிறுவனம் ஒன்றும்  நடத்தி வருகிறார். அவர் டுவிட்டரில் சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருவது அவரது வழக்கம். தமிழகத்தின் ஜல்லிக்கட்டு, கஜா புயலுக்காகவும் குரல் கொடுத்துள்ளது நினைவில் இருக்கலாம். 

தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களுக்காக தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் மறைந்த 40 வீரர்களுக்கும் இரங்கலை தெரிவித்த வீரேந்திர சேவாக் அவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும், என்னுடைய சர்வதேச பள்ளியில் அவர்களை இணைத்து படிக்க வைக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், அவர்களுக்காக நாம் எதையும் செய்துவிட முடியாது. குறைந்தபட்சம் என்னால் முடிந்ததை இதனை செய்கின்றேன் என அவர் தன்னுடைய ட்விட்டரில் கல்வி செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார். அவர் ஹரியானா மாநிலத்தில் ஹஜ்ஜாரில் அவருடைய சர்வதேச பள்ளிக்கூடம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதே ட்விட்டில் மறைந்தவர்கள் புகைப்படத்தையும் அவர்களுடைய பெயர் பட்டியலையும் சேவாக் இணைத்துள்ளார். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sehwag accept education expenses to child of CRPF jawans martyred


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->