#வீடியோ: கீழேயிருந்து சிகிரெட்டை எடுத்து, வாயில் வைத்து ஊதி பார்க்கும் நண்டு.. கொந்தளிக்கும் ஆர்வலர்கள்..! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள இளைஞர்களிடையே வெகுவாக பழகியுள்ள கலாச்சாரமாக புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் மதுபானம், எதிர்பாலினத்தை கவறுதல், ஏமாற்றுதல் போன்றவை மாறியுள்ளது. இதனால் பிற்காலத்தில் 40 வருடங்கள் முதல் 60 வருடங்கள் என வாழும் வயது வரை ஏற்படும் பாதிப்புகள் என்னவென்றே தெரியாமல், இளங்கன்று பயம் அறியாது என்று நெஞ்சை நிமிர்த்தி தவறுகளை செய்து வருகின்றனர். 

சிலருக்கு சில பழக்கம் மட்டும் என புகைபிடிக்கும் பழக்கம் இருந்து வந்தாலும், தனது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைவதை அறியாமலேயே தவறான பழக்கங்களை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கஞ்சா, ஹெராயின் என்றும் தங்களின் உடல் நலத்தினை சீரழித்து வருகின்றனர். 

எங்கு சென்றாலும் சிகிரெட், எந்த நேரத்திலும் சிகிரெட் என்று இருந்து கொண்டு, இழக்கும் சத்துக்களை மீட்க தேவையான பழச்சாறுகள், காய்கறிகளை கூட சரிவர எடுத்துக்கொள்ளாது இருக்கின்றனர். உடல் நலத்திற்கு பெரியளவு தீங்கு செய்து, உடலை பாதுகாக்கும் பழங்கள் போன்றவற்றை ஒரு விழுக்காடு கூட எடுத்துக்கொள்வதில்லை. 

இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் புகைத்துவிட்டு கீழே போடப்பட்டு இருந்த சிகிரெட்டை, நண்டு ஒன்று வாயில் வைத்து பார்க்கும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும், இதனை அங்குள்ள நபர் விடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

கடற்கரை பகுதியில் புகைபிடிப்பது இன்றுள்ள இளம் தலைமுறையால் அதிகளவு விரும்பப்படும் நிலையில், தயவு செய்து புகைத்துவிட்டு தன்னை மண்ணிற்குள் புதைத்து வையுங்கள் அல்லது தீயினை அனைத்துவிடுங்கள் என்று ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். சிகிரெட் மிச்சத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படும் என்றாலும், இது அதை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sea Crab Smokes Cigarette video trending in social media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->