ரஜினியின் மீது அடுத்தடுத்து பாய்ந்த வழக்கு... வாபஸ் வாங்கப்பட்டதன் பின்னணி என்ன?..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் துக்ளக் இதழுடைய 50 ஆவது வருட விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். பின்னர் துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவிற்கான மலரை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், துக்ளக் மலரை முதல் பிரதியாக நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன் மற்றும் த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோர் பங்கேற்றுக்கொண்டனர்.  

இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய சமயத்தில், மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பது தந்தைக்குரிய பதவியாகும். இந்த மாபெரும் சேவையினை தொடர்ந்து செய்து வரும் துக்ளக் இதழை சிறப்பாக செயல்படுத்தி குருமூர்த்தி வருகிறார். சோ மிகச்சிறந்த அறிவாளி ஆவார். அறிவாளியை தேர்ந்தெடுக்கவே பத்திரிகை துறை இருந்து வருகிறது. 

சோ எடுத்த ஆயுதமே துக்ளக். சோவின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகை நடத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். துக்ளக் இதழையும், சோ ராமசாமியையும் பெரிய அளவில் பிரபலமாக்கிய நபர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பகத்வத்சலம். முரசொலியை பொறுத்த வரையில் முரசொலி என்று கூறினாலே திமுக காரன் என்பார்கள். 

துக்ளக்கை வைத்திருந்தால் அறிவாளி என்று கூறுவார்கள்.. பெரியாரின் தலைமையில் ராமர் மற்றும் சீதாவின் உருவங்கள் நிர்வாணமாக சாலையில் எருது செல்லப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. இருவரின் சிலைக்கும் செருப்பு மாலையும் போடப்பட்டது என்று பேசினார். இதனை அறிந்த திராவிடர் விடுதலை கழகத்தினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து ரஜினிக்கு எதிராக பல கண்டனமும், விமர்சனமும் எழுந்தது. ஒருதரப்பினர் ரஜினியை ஆதரித்தும், மற்றொரு தரப்பினர் பெரியாரை ஆதரித்தும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், ரஜினிக்கு எதிராக வீடு முற்றுகை போராட்டம், யாருக்காக போராடுகிறோம், என்ன கோஷம் போட வேண்டும் என்றே தெரியாமல் ஒரு போராட்டம், போராட்டத்திற்கு வந்த வேனின் பின்புறத்தில் முருகன் புகைப்படம் என பல விஷயங்கள் கடந்த போராட்டத்தின் போது இணையத்தளத்தில் ட்ரெண்டிங் ஆனது. மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தனது சொந்த கருத்தாக ரஜினிக்கு ஆதரவளித்து பேசியிருந்தார். 

தற்போது இன்று திராவிட கழகத்தால் ரஜினியின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் மற்றும் புகார்களை திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து, இதனை அறிந்த ரஜினி ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் கருத்தாக பதிவு செய்து வருகின்றனர். மேலும், இது தொடர்பான வழக்குகள் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் இருந்தும், காவல் நிலையத்தில் இருந்தும் வாபஸ் பெறப்பட்டதன் பின்னணி ரஜினி ரசிகர்களின் பலம், அரசியல் பலம் என்று ஒருதரப்பும், ரஜினியின் ரசிகர்கள் இப்போது அமைதியாக இருந்தாலும், அன்றைய காலங்களில் எப்படி இருந்தவர்கள் என்று அனைவருக்கும் தெரிந்த நிகழ்வு என்பதால், வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றும் கருத்துக்கள் உலாவி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth periyar issue case withdraw social media trending


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->