மாட்டிற்கும் - மனிதனிற்கும் உள்ள பங்கு என்ன?... வாட்ஸப்பில் உலவும் வைரல் கதை.!! - Seithipunal
Seithipunal


மாட்டுப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வாட்சப் செயலியில் வைரலாகும் கருத்தினை வியப்படைவோம். 

வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி.
காளைக்கு கஷ்டந்தெரியக்கூடாதென்பதற்காக
அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.

மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத்தொழில்லநீதான் முன்னாடி நான் பின்னாடிதான்.
முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார்.

அடடா.. இந்த மனிதஜாதிதான் எவ்வளவு மேலானது
என்று நினைத்து சிலிர்த்துப்போனது காளை.

விவசாயி தொடர்ந்தார்.
நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி.

அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி எனக்கு பாதி.

காளைக்கு தலைச்சுற்றியது.எவ்வளவு நேர்மை..!
பாதிக்குப்பாதி பங்குதர யாருக்கு மனசுவரும்..!

பாதிப்பாதின்னா எப்படி பங்குவைக்கலாம்?நீ முன்னால போறதால முன்னால கிடைக்குறது உனக்கு. பின்னால கிடைக்குறது எனக்கு. சரியா? என்றார் விவசாயி.

முன்னால வர்றது எல்லாமே எனக்கா..!
பெருமிதமாய் பார்த்தது காளை.

விதைவிதைத்து
நாற்றுநட்டு சிலகாலத்தில் பச்சைப்பசேலென்று மாறியிருந்தது வயல்.
மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில்.
விவசாயியை பார்த்தது.

முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு.
இதுல அப்புறமா ஒன்னு வரும்.
அதுமட்டும் எனக்கு.
சரியென்று தலையாட்டியது காளை.

கொஞ்சநாட்களில் நெற்கதிர்கள் குதிரைவால்போல
விளைந்து தரைபார்த்துக்கிடந்தன.

அறுவடைநாள் வந்தது.
முதலில் வந்த வைக்கோல் காளைக்கு.
பின்னர்வந்த நெல் விவசாயிக்கு.

மாடு கோர்ட்டுக்கா போகமுடியும்..?
பாகப்பிரிவினையில் அநீதியுள்ளதென்று பரிதாபமாய் பார்த்தது காளை.
கவலைப்படாதே நெல்லிலும் பங்குதர்றேன்.
அதிலும் நமக்கு பாதிப்பாதி.
சோகத்துடன் தலையாட்டியது காளை.

நெல்லை உலரவைத்து
அரைத்துப்புடைத்ததும்
உமியும் தவிடும் முன்னால் வந்தது.
அது காளைக்கு.
பின்னால்வந்த முத்துமுத்தான அரிசி முழுமையும் மனிதனுக்கு.
இந்த பங்கீட்டிலும் நியாயமில்லையென்று கண்ணீர்விட்டது காளை.

அழுவாதே.இந்த அரிசியிலும் உனக்கு பாதி எனக்கு பாதி.
.. சரியா? என்றார்
 விவசாயி.

அதற்கும் சரியென்று தலையாட்டிய அந்த வாயில்லா ஜீவன்,
அரிசியை நோக்கிச்சென்றது.

பொறு.,,,,அரிசியை சோறாக்கி, அதில் முதலில் வருவது உனக்குதான்.
அடுத்துவருவதுதான் எனக்கு.
சோகத்துடன் தலையாட்டியது காளை.

அரிசியை சோறாக்கி வடித்தபோது
முதலில் வந்த சோற்றுக்கஞ்சி காளைக்கு.
அடுத்துவந்த சோறு மனிதனுக்கு.
காளை முரண்டுபிடித்தது.

இந்தமுறை,
முன்னால மனிதனுக்கு
பின்னால மாட்டுக்கு என்று ஒப்பந்தத்தை மாற்றும்படி கெஞ்சியழுதது.

சரியென்று ஏற்றுக்கொண்ட விவசாயி அப்படியே செய்தார்.
பொங்கல் திருவிழா வந்தது.

முதலில் வந்த *பொங்கல் மனிதனுக்கு
அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல் " என்ற உரையாடல் வாட்ஸப்பில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal celebration equality of cow and man


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->