இந்த சிறுவனின் சிரிப்புக்கு முன் ஈடேதும் உண்டோ?... உலகமே உன் சிரிப்பில் நெகிழ்ந்துபோகும்..! - Seithipunal
Seithipunal


உலகமும் அதன் இயற்கை வளமும் தன்னகத்தே பல மாற்றங்களையும், மறுபாடுகளையும் கொண்டது. அதனைப்போலத்தான் மனித இனமும். அனைவரும் அதே உடல் அமைப்புடன், உடல் திறனுடன், உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்சனையை பொறுத்து நாமும், நமது மனமும் நம்மை வேறுபடுத்துகிறது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளி சிறுவன் ஊஞ்சல் ஆடி விளையாடி மகிழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோவில், கை-கால்கள் செயலிழந்த நிலையில் உள்ள சிறுவனுக்காக பிரத்தியேக ஊஞ்சல் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊஞ்சலில் கை-கால்கள் செயலிழந்த சிறுவன் தனது வீல் சேரில் அமர்ந்து, தனது பெற்றோர்கள் ஊஞ்சலை தள்ளிவிடும் போது சிறுவன் முன்னும் பின்னும் சென்று வருகிறான். இதனால் அந்த சிறுவன் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகி, தனது கைகளை இயன்றளவு சேர்த்து தட்டி மகிழ்ச்சியடைகிறான்.

இது குறித்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வரும் நிலையில், சிறுவனின் அந்த புன்முகத்திற்கு மேல் வேறொரு சொத்து வேண்டுமோ? என்ற மனநிலையில் பெற்றோர்கள் இருப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. சிறுவன் யார் என்ற விபரம் இல்லை.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Physically Challenged Child Swing Specially Made for Physically Challenged with help of father and lot of happy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->