பட்டனை அமுக்கு.. பல்லை துலக்கு...! அறிமுகமான எலக்ட்ரானிக் டூத் பிரஷ்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நவீன காலகட்டத்தில் தினமும் பல்வேறு விதமான புதுப்புது நவீன பொருட்கள் நமது சந்தையில் அறிமுகமாகிறது. இது மனிதர்களின் செயலை எளிமைப்படுத்த, இயந்திரத்தால் உருவாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் ஆக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது எலக்ட்ரானிக் பல்துலக்கும் பிரஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரானிக் பல்துலக்கும் பிரஷ் ஷாவ்மி என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பிரஷில் பல அம்சங்களும் நிறைந்துள்ளது. 

இந்த பிரஷை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்யும் பட்சத்தில், 25 நாட்களுக்கு உபயோகம் செய்யலாம். நான்கு நிறத்தில் பிரஷ்கள், அலைபேசியுடன் இணைத்துக்கொள்ளும் வசதி மட்டும் இல்லாது பிற வசதிகள் என்று அதிகம் உள்ளது. 

மேலும், தண்ணீரால் பாதிக்கப்படாத வண்ணம் வாட்டர்ப்ரூப் வசதி, தலைப்பகுதியை தேவைக்கேற்ப வளைக்கும் தன்மை என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பானது இந்திய தொகையில் ரூ.1299 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், ஒரு வருட உத்திரவாதமும் கொடுக்கப்படுகிறது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new electronic tooth brush introduced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->