என்னங்கடா இப்டிலாம் இறங்கிடீங்க.. அலைபேசியை வைக்க சாப்பாடு தட்டு மாடலையே மாற்றிய நிர்வாகம்.!! - Seithipunal
Seithipunal


அலைபேசி என்பது நமது வாழ்க்கையின் பிரிக்க இயலாத அங்கமாக மாறிவிட்டது. சாப்பிடும் நேரத்திலும், கழிவறையில் இருக்கும் நேரத்திலும் என எந்த நேரமும் அலைபேசியும் கையுமாக பலரும் இருந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் நாள் முழுவதையும் இனிமையாகவும், சண்டையிட்டும் பொழுதை கழிக்க நாம் பழகிவிட்டோம். 

ஆனால், சிலர் சாப்பிடும் போதும் அலைபேசியை உபயோகம் செய்து வந்த நிலையில், சில நேரம் அலைபேசி குழம்புகளில் நீந்தும் சுவாரசிய சம்பவமும் நடைபெறும். இந்த நிலையில், இதனை சரி செய்யும் வகையில் தட்டு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

வட இந்தியாவில் சாப்பாடு நிரம்பிய தட்டினை தாலி என்று அழைப்பார்கள். இந்த தாலி பருப்பு, ரொட்டி, அரிசி, தயிர், சால்ட் மற்றும் இனிப்பு போன்ற வகைகளை கொண்ட உணவாகும். இந்த தட்டில் தற்போது அலைபேசி வைப்பதற்கென தனியொரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த புகைப்பட காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், இப்புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான பதிவு வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MOBILE USING TYPE FOOD PLATE INTRODUCED


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->