#Breaking :: நாசாவில் இருந்து அமைச்சர் கே.என் நேரு! ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து அட்டூழியம்! - Seithipunal
Seithipunal


 தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் நேருவின் டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் பெயரில் நாசா மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்பான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. அமைச்சர் கே.என் நேருவின் ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படமாக அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் விண்வெளியில் இருப்பது போன்ற புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் நேருவின் ட்விட்டர் பக்க பின்னூட்டத்தில் "நாசாவின் பக்கம் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து அப்டேட் செய்யப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஆய்வகம் பூமியிலிருந்து 250 மைல்கள் மேலே அமைந்துள்ளது. ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை அறிய பின் தொடருங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அமைச்சர் கே.என் நேருவின் ட்விட்டர் பக்கம் நேற்று இரவு 11 மணி வரை செயல்பாட்டில் இருந்துள்ளது. இன்று அதிகாலை முதல் ஹேக் செய்யப்பட்டு நாசா மற்றும் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பதிவுகள் போடப்பட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் நேரு தரப்பினர் ஹேக் செய்யப்பட்ட கே.என் நேருவின் ட்விட்டர் கணக்கை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister KN Nerhu twitter account hacked


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->