தாதுமணல் கடத்தல் விவகாரம்.. ஸ்டாலினை வச்சி செய்த நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


தாதுமணல் திருட்டு... இந்த வார்த்தை நமக்கு மிகவும் பழக்கமான வார்த்தை. அதுவும் கடந்த 10 வருடங்களாக இந்த தகவலை நாம் அதிகளவு கேட்டிருப்போம். ஏனெனில் தாது மணல் திருட்டு மற்றும் தாது மணல் கொள்ளை என்று பல விஷயங்களை நாம் கேட்டிருப்போம். தூத்துக்குடி பகுதியில் அதிகளவு தாது தன்மையை கொண்ட மணலை வியாபார ரீதியாக திருட்டுத்தனமாக விற்பனை செய்வதே தாது மணல் கொள்ளை என்று கூறப்படுகிறது.

தாதுமணல் தொடர்பான விற்பனை அரசு டெண்டர் விட்டு நடத்தி வந்தாலும், துவக்கத்தில் இதனை எடுக்கும் அனுமதி மத்திய அரசிடம் மட்டுமே இருந்தது. டெண்டரை எடுக்கும் முக்கிய புள்ளிகள் பணத்தினை மட்டும் இலாபமாக வைத்து மொத்த மணலையும் கள்ளத்தனமாக ஏற்றி வருமானம் ஈட்டி வந்தது. இந்த விஷயம் தொடர்பாக பல சர்ச்சை தகவல் எழுந்து, தாதுமணல் கொள்ளை குறித்து விசாரணையும் நடைபெற்று வந்தது. இதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரத்தியேக குழு அமைத்து விசாரணை செய்தும் இன்று வரை நடவடிக்கை இல்லை.

இந்த தாதுமணல் தொடர்பாக கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அனுமதி அளித்ததும், அதனை அன்றைய அதிமுக எதிர்த்தும் குறிப்பிடத்தக்கது. இப்போதுவரை தாது மணல் கடத்தல் என்பது முன்னரை விட குறைந்து இருந்தாலும், இது முற்றிலும் முடக்கப்பட்ட வேண்டியது. நம்மிடம் இருந்து தகுதிகளை பெற்றுக்கொள்ளும் பிறநாட்டு நிறுவனங்கள், தாதுக்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நம்மிடமே மீண்டும் அதிக விலைக்கு விற்பனை செய்து இரட்டை இலாபம் பார்த்து வருகிறது. 

சில மணற்கடத்தல் கும்பல்கள் தாது மணல்கள் மூலமாக பல்வேறு ஆராய்ச்சியை மேற்கொண்டு அணு ஆயுதங்கள் தயாரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. தாதுமணல் கொள்ளை விவகாரத்தால் அரசுக்கு பல கோடிகள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தாதுமணலை அள்ள முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தாலும், அது இன்று வரை பலனில்லாமல் இருக்கிறது. 

தற்போது தேர்தல் வரவுள்ளது என்பதால், முன்னதாக திமுக வரவேற்று துவங்கி வைத்த நீட் முதல் ஸ்டெர்லைட் வரை அரசியலுக்காக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், தாது மணற்கொள்ளை தொடர்பாக ஏகபோகமாக எழுதியுள்ளார். பின்னர் கொரோனாவால் ஏற்பட்டுள்ள தமிழக அரசிற்கான இழப்பை சரி செய்ய, தாது மணல் உற்பத்தி செய்யும் டாமின் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனைக்கண்ட நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி " அரசாங்கத்திற்கு வருமானத்திற்கு வழி இல்லாதது போல இது என்ன புதிய யுக்தியாக இருக்கிறது. அரசிற்கு வருவாய் வேண்டும் என்றால் போதிய வசதியை அனைத்து துறைகளிலும் ஊக்குவித்து, தரத்தினை உயர்த்தி பெற்றுக்கொள்ளட்டும். அதற்கு தாதுமணல் தான் வழியா?. உங்களின் கொள்கையெல்லாம் திமுக சின்னம் ஒட்டிய லாரியில் மணல் கடத்துவது தான் " என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mineral sand theft issue social media handlers Disgusting about DMK MK Stalin Mineral sand theft


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->