டிக் டோக்கில் திருமணம்.. புள்ளிங்கோ அட்டகாசம்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆப், டிக் டோக். இந்த ஆப்பை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இதில் ஆண், பெண், வயதானவர்கள் என்று அனைத்து வயதுடையவர்களும் பொழுதுபோக்கும் தாண்டி லைக்குக்காக அடிமையாகி வருகிறார்கள்.

இன்னும் சில பேர் டிக் டோக், மூலமாக காதலை பரிமாறிக் கொள்வது, தாலி கட்டிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில் இளைஞன் ஒருவன் பெண்ணுக்கு தாலி கட்டுவது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் கோயிலின் கொடி மரத்தின் அடியில், சில இளைஞர்கள் மத்தியில் லுங்கி கட்டிக்கொண்டு பெண்ணுக்கு தாலி கட்டுகிறார். இதை தொடர்ந்து இரண்டு மாலைகள் கொண்டுவரப்பட்டு மாலை மாற்றி, கைதட்டி, விசில் அடித்தபடி அந்த வீடியோ முடிவடைகிறது.

இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இப்படியெல்லாம் கல்யாணம் செய்துகொள்வது கண்றாவியாக இருக்கிறது என்றும், யாரும் உணர்ச்சிவசப்பட அவசியமில்லை ஆடம்பரமாக கட்டிக் கொடுத்தும் கருமம் புடிச்சவனே டிவோர்ஸ் வாங்கிட்டு வந்து நிக்குதுங்க அவங்களுக்கு இவங்க எவ்வளவோ பரவால்ல என்றும், கலவையான விமர்சனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage in tik tok viral video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->