அண்ணனை போலவே அருமையான தங்கை.. ஆக எடப்பாடி அரசு..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் சீனாவில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸின் தாக்கமானது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரம், மருத்துவம் என்று பல்வேறு துறைகளில் கோலோச்சி இருந்த நாடுகளும், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இதனால் உலகளவில் பெரும் அரசியல் பிரச்சனைகளை கொண்ட நாடுகளே ஒருமித்து செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் இந்திய அரசையும், தமிழகத்தில் தமிழக அரசையும் எதிர்த்து பல குரல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா இந்தியாவில் பரவ துவங்கிய துவக்கத்தில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே உலகளவில் பாராட்டுகளை பெற்ற மருத்துவர்கள், பல விடீயோக்களை பதிவிட்டு போரட்டம் செய்யாத குறையாக கூறும்போதெல்லாம் எதிர்க்கட்சியான திமுக வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது ஆக எடப்பாடி அரசு என்று குற்றம் சுமத்தி வருகிறது.  

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், " கொரோனாவுக்கு எதிரான போரில், பாலின பேதமின்றி, அரசியல் காழ்ப்பின்றி, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றுதல் அவசியம். நாட்டிலேயே, மிகச் சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பு இருந்தும் 22 ஆகஸ்ட் அன்று, தமிழகம் 6400 இறப்புகளை எட்டியுள்ளது.

இது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு, 2021 தேர்தலை மனதில் வைத்து அதிமுக அரசின் சாதனையாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சித்தரிப்பதே காரணம். 6400 இறப்புகளுக்கு எடப்பாடி அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் " என்று கூறியுள்ளார். இதுவே தற்போது நெட்டிசன்கள் கைகளில் சிக்கியுள்ளது..

கனிமொழியின் ட்விட்க்கு கண்டனம் தெரிவித்துள்ள நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர். இதில், உச்சபட்சமாக ஒவ்வொரு வரிக்கும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். கொரோனாவிற்கு எதிரான போரில் தமிழக அரசு இப்போது வரை எடுத்துள்ள நடவடிக்கையால் தான் மக்கள் ஓரளவு நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.

உலக நாடுகளே கொரோனா விஷயத்தில் அரசியல் செய்யாமல், தங்களால் இயன்ற உதவி செய்து வரும் நிலையில், தமிழகத்திலும், இந்தியாவிலும் தான் இப்படிப்பட்ட அரசியல் சுயலாபம் தேடி வருகின்றனர் என்றும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும், இயல்பாகவே நோயின் தன்மையை அறிய இயலாத புதுவகை நோய், மக்களிடம் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது நாட்கள் கடந்து சென்றால் தான் தெரியவரும். 

இதனைப்போன்று நோய் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல தனது தகவமைப்பை மாற்றிக்கொண்டு பரவும். இதனால் யாருக்கு நோய் ஏற்பட்டுள்ளது?, எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிவதே மிகுந்த கடினம் என்றும், இப்போதுவரை தடுப்பூசி இல்லாத சூழ்நிலையில், பிற தடுப்பு மருந்துகளை தேவைக்கு அதிகமாகவே தமிழகத்தில் அரசு கைவசம் வைத்திருக்கிறது என்றும் கூறுகின்றனர். 

மக்களின் மீதான நலன் உண்மையில் உங்களுக்கு இருக்கிறது என்றால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வழிவகை சொல்லலாம் என்றும், தேவையில்லாமல் பல பேச்சுக்களை பேசிவிட்டு, நிர்வாகிகளை களப்பணியாற்ற கூறிவிட்டு வீட்டிற்குள் இருக்க வேண்டாம் என்றும், இவ்வுளவு மக்கள் மீது அக்கறை கொண்ட கனிமொழி, ஸ்டாலின், தயாநிதி மக்களோடு மக்களாக களப்பணியாற்ற வேண்டும் என்றும் கொந்தளித்துள்ளனர். 

நோயின் வீரியத்தை அறிந்துதான் ஸ்டாலின் தெளிவாக வீட்டிற்குள்ளேயே இருக்கிறார் என்றும், தேவையில்லாமல் அரசியலில் பெரிய புள்ளி போல தங்களை காண்பிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi trolled by Social Media Critics in Twitter


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->