பெயரை மாற்றுகிறதா பேஸ்புக்?.! விரைவில் அதிகார்வபூர்வ அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


பேஸ்புக் தனது நிறுவனத்தின் பெயரை மாற்ற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சமூகவலைதளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. ஆரம்பம் முதலே பேஸ்புக் மக்களிடம் வரவேற்பை பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால், சமீபத்தில் பேஸ்புக்  பல்வேறு சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. குறிப்பாக அந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் அமெரிக்காவில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பேஸ்புக் தனது பெயரை மாற்ற போவதாகவும் இதற்கான அறிவிப்பை வருகின்ற 28 தேதி நடைபெற இருக்கும் பேஸ்புக்கின் வருடாந்திர கூட்டத்தில் அதன் சி. இ. ஒ மார்க் ஸக்கர்பர்க் வெளியிட கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் புதிய பெயரில் ரீபிராண்டிங்க் செய்யப்படும் எனவும்  அந்த நிறுவனத்தின் கீழ் அதனுடைய ஒரேயொரு மொபைல் ஆப்பில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஓகலஸ் உள்ளிட்ட பிற புரோடக்ட்கள் கிடைக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல் குறித்து, பேஸ்புக் கூறுகையில் யூகங்களுக்கு பதில் கூற முடியாது என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Information about changing the Facebook name has been leaked


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal