கஸ்தூரியிடம் இணையத்தில் தகராறு செய்த நபர்கள்... ட்விட்டரிடம் ரிப்போர்ட்..!! - Seithipunal
Seithipunal


இணையதள பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படும் சில பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலரும், சில நேரத்தில் எதிர்பாராமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கருத்துக்களுக்கு ஆளாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. 

அந்த வகையில் திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் ராம் சினிமாஸ் தற்போது அஜித் ரசிகர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலியில் பிரதான திரையரங்காக நெல்லை ராம் சினிமாஸ் இருந்து வருகிறது. இந்த திரையரங்கு நிர்வாகத்தின் சார்பாக ட்விட்டர் பக்கத்தில் எந்த நேரத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், #BoycottRamcinemas என்ற ஹாஷ்டேக் இணையதளத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

இந்த நிலையில், இணையத்தளத்தில் அதிகளவு வளம் வரும் பிரபல நடிகையாக இருந்து வருபவர் கஸ்தூரி சங்கர். இவர் பல திறமைகளை தன்னுள் கொண்ட நிலையில், நடித்துக்கொண்டு இருப்பது மட்டுமல்லாது அரசியலிலும் தற்போது பல கருத்துக்களை முன்வைத்து கொண்டு வருகிறார். இவர் நடித்துக்கொண்டு இருந்த காலத்தில் இவருக்கென ரசிகர் பட்டாளமே இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறு வேடங்களில் மட்டும் நடித்துள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் அரசியல் மற்றும் பிற விஷயங்களில் தனது கருத்துக்களை தெரிவிப்பதும், இவரது கருத்துக்களை பிடிக்காத பலரும் இவரது இணையப்பக்கத்தில் பெண் என்றும் பாராது அவதூறாக பேசுவதும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இந்த நிலையில், இதே நிலை தற்போதும் தொடர்ந்துள்ளது. 

இவர் முன்னதாக தெரிவித்துள்ள கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் உலாவும் ட்விட்டர் கணக்குகள் கஸ்தூரி சங்கர் குறித்து மிகவும் அவதூறாக பேசியதை அடுத்து, பதில் தெரிவிக்கும் விதமாக " மாட்டுக்கு  சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.  பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க என்றும், இவரிடம் அவதூறாக பேசிய நபர்களின் கணக்கையும் குறிப்பிட்டு " ட்விட்டர் அமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in twitter kasthuri shankar complaint


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->