ஒரு வீடியோ என்ன?.. 500 போடுவேன்..! பேப்பர் ஐடி Vs ரவுடி ஜிபிமுத்து.. டிக் டாக் சண்டைகள்.. அட்ராசிட்டி விடியோக்கள்.!! - Seithipunal
Seithipunal


சமூகவலைத்தளங்கள் அனைவரிடமும் இல்லாத நேரத்தில் ஒருவர் பிரபலம் ஆவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் திரைப்படம் நடிக்க விரும்புபவர்கள் பல இடங்களில் ஏறி இறங்க வேண்டும். ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை. ஒரே ஒரு வீடியோ மூலம் உலகம் முழுவது பிரபலம் ஆகா முடிகிறது.

மேலும்,  டிக் டாக் என்ற செயலின் மூலம் பல பேர் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலம் ஆனவர் தான் ஜிபி முத்து. கோமாளி போல் ஏதாவது ஒரு வீடியோ செய்யும் இவருக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. இவர் திருமணம் ஆனவர். 

இதை தொடர்ந்து, இவருக்கு ஜோடியாக டிக்டாக்கில் கலாய்க்கப்படுபவர் தான் ரவுடி பேபி சூர்யா. இவர்கள் இருவரும் சேர்ந்து பல டூயட் பாடியிருக்கிறார்கள். அந்த வீடியோக்களும் மிகவும் வைரலாக பரவியது. சமீபத்தில், சூர்யா குறிப்பிட்ட ஜாதி குறித்து தவறாக பேசியதாக அவரது ஐடியை டிக் டாக் பிளாக் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இருவரும் இணைந்து பிரபல யூ டியூப் சேனலில் பேட்டி என்னும் பெயரில் அலப்பறைகள் செய்து வந்தார்கள். அதில் எனக்கு ஏதாவது நடக்குதுன்னா என் புருசனுக்கும் முன்னாடியே என் மாமாவுக்குத் தெரியும் என வரம்புமீறி அழிச்சாட்டியம் செய்திருந்தார். இவர்கள் இருவரும் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாது டூயட்டில் மட்டுமே குறியாக உள்ளனர். 

டிக் டாக் விடியோவை காண இங்கு அழுத்தவும்... 

தற்போது டிக் டாக் செயலியில் பேப்பர் ஐடி பிரச்சனையில் பலர் சிக்கியுள்ளனர். இந்த குறித்த பேப்பர் ஐடிக்கு பிடிக்காத நபர்கள் பதிவு செய்யும் விடீயோக்களுக்கு, அவருக்கு தெரிந்த வகையில் கண்டனம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ஜிபி முத்து கடுமையான ஆவேசப்பட்டது மற்றும் நாளொன்றுக்கு 500 வீடியோ பதிவு செய்வேன் என்றும் சபதம் எடுத்துள்ளார். இதனையெல்லாம் கண்டு டிக் டாக் லைக்குகளை பெற எதையெல்லாம் செய்கிறார்கள் பார் என்று விமர்சனமும் இருக்கிறது. ஆக டிக் டாக் நண்பர்களே டிக் டாக் என்பது பொழுதை சிரிப்பாக கழிக்க மட்டும் தானே என்பதை தவிர்த்து, அதிலேயே மதுபோதை போல அடிமையாகிவிடக்கூடாது.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tic tok fight about gp muthu vs paper id


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->