இருசக்கர வாகனத்தில் செல்லும் போது புகையுடன் வித்தை காட்டிய புள்ளிங்கோ.. வடிவேல் காமெடியாக மாறிய வீடியோ காட்சி..!! - Seithipunal
Seithipunal


இணையத்தளம் இன்றளவில் நமக்கு பெரும் உதவியை செய்து வருகிறது. தினமும் நான் நமது இருப்பிடத்தில் இருந்து கொண்டே, உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் விஷயங்களை நாம் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொண்டு வருகிறோம். 

இந்த இணையத்தளத்தில் தற்போதுள்ள நிலையில் பல பஞ்சாயத்துகளை பார்த்துக்கொண்டு வரும் நிலையில், சில நேரம் எதார்த்தமான காமெடி வீடியோ காட்சிகளும் நமது கண்களில் சிக்குவதுண்டு. இவ்வாறான காமெடி வீடியோ காட்சிகள் நமது முயற்சி பல்பு வாங்கும் சமயத்தில் நம்மாலேயே படமாக்கப்பட்டு வைக்கப்படுகிறது. 

நாம் ஒரு விஷயத்தை செய்வதற்கு தயாராகி, அதனை செய்யும் போது சில எதிர்பாராத தருணங்களில் நமக்கு "ஆனைக்கும் அடிசறுக்கும்" என்ற பழமொழியை போல கீழே விழுந்து வாருவதுண்டு. அவ்வாறாக கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்று பெருமிதமாக எழுந்து செல்வோம். 

ஆனால் நமது செயல்கள் வீடியோவில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதால், இதனை கண்டு நாம் ரசிப்பதும் உண்டு. இந்த நிலையில், புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு, வாகனம் ஓட்டும் போது தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது நாம் நன்கு அறிந்த நமது பாதுகாப்பாகும். 

தலைக்கவசமும் இல்லாமல், கைகளில் சிகிரெட்டுடன் புகைத்துக்கொண்டு விதைக்காட்டி வாகனத்தில் சென்றால் என்னவாகும் என்பது, தற்போது வெளியான வீடியோ காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சியில் நபரொருவர் ஒருகையில் சிகிரெட், மறுகையில் குளிர்பானம் என கால்களால் வாகனத்தை இயக்கவே, ஒரு கட்டத்திற்கு மேல் குறும்புத்தனத்தால் கீழே விழுந்து பல்பு வாங்கியது நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in social media trend man smoke and drive without hand finally slipped


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->