ரஜினியை வைத்து மட்டுமில்லை.. இன்னும் பல நல்லசெய்தி கூறும் தருமபுரி காவல்துறை.. ட்விட்டரில் வைரலாகும் பதிவு..!! - Seithipunal
Seithipunal


இன்றைய கால கட்டத்தில் மக்கள் பலவிதமான முன்னேற்றத்தை கண்டு அதனை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில்., நமது செய்திகளை அந்த காலத்தில் ஒருவருக்கு தெரிவிக்கவேண்டும் என்றால்., முதலில் ஒரு நபரிடம் கூறி அனுப்பி அந்த செய்தியை தெரிவித்தோம். அந்த செய்தியை ஊர் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றால்., தண்டோரா மூலமாக தெரிவித்து வந்தனர். 

காலங்களும்., கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து வளரவே., அலைபேசிகள் கண்டறியப்பட்டு., தபால் நிலையங்களில் சென்று தபால்கள் மூலமாக தெரிவித்தும்., பின்னர் தபால் நிலையங்களில் இருந்த அலைபேசியின் வாயிலாக தெரிவித்து வந்தோம். 

அதற்கு அடுத்தபடியாக அலைபேசியின் மூலமாக தெரிவித்து., அந்த அலைபேசியில் ஏற்பட்ட புரட்சி வளர்ச்சியின் விளைவால் பல்வேறு விதமான அலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டு., அதற்கான பல செயலிகள் கண்டறியப்பட்டு., எங்கோ உள்ள நபர் கூறும் கருத்திற்கு நாம் நமது கருத்தை அவரது பதிவேட்டிலேயே தெரிவித்து வருகிறோம். 

இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடிய அல்லது பல்வேறு விதமான பிரச்சனைகளை தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவது முகநூல்., ட்விட்டர்., வாட்சப் போன்ற பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு அதன் மூலம் கருத்துக்களை தெரிவித்து வருகின்றோம். அந்த வகையில், தற்போது ட்விட்டர் பக்கத்தில் தருமபுரி காவல் துறையினர் கணக்கில் தெரிவித்தது வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான ட்விட்டர் பதிவில், ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் வந்த புகைப்படத்தை வைத்து, " நீங்க மனசு கஷ்டமா இருக்குனு சிகிரெட் குடிச்சா, அது உங்களை குடிச்சிரும்.. அதை தூக்கி எறிஞ்சா உங்களுக்கும் நல்லது. உங்களை நம்பியுள்ள குடும்பத்துக்கும் நல்லது " என்று பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான ட்விட்டர் பதிவானது வைரலாகி வருகிறது. இது போன்ற பல நல்ல விஷயங்களை ட்விட்டரில் காவல்துறையினர் பகிர்ந்து வருகின்றனர். இதற்கென்றே பிரத்தியேக குழு இயங்கி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகை மற்றும் மது பழக்கம், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in social media trend about smoking in injurious to health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->