அஜித் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளான நெல்லை ராம் சினிமாஸ்...!! ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட்.!!
in social media trend about boycott ram cinemas
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் உள்ளது. அவ்வாறாக இருக்கும் திரையரங்குகளில் இணையதள பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படும் சில திரையரங்கு நிர்வாகம், சில நேரத்தில் எதிர்பாராமல் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாவது தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் ராம் சினிமாஸ் தற்போது அஜித் ரசிகர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலியில் பிரதான திரையரங்காக நெல்லை ராம் சினிமாஸ் இருந்து வருகிறது.
இந்த திரையரங்கு நிர்வாகத்தின் சார்பாக ட்விட்டர் பக்கத்தில் எந்த நேரத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், #BoycottRamcinemas என்ற ஹாஷ்டேக் இணையதளத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்த வகையில், அஜித் ரசிகர்கள் ராம் சினிமாஸை புறக்கணிப்பதாக இது இருக்கிறது. இவர்கள் எதற்கு புறக்கணிக்கிறார்கள்? என்பது குறித்த முழு விவகாரம் தெரியவராத நிலையில், ராம் சினிமாஸை தவிர்க்கும் படி தொடர்ந்து தங்களின் பதிவுகளை அஜித்ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
English Summary
in social media trend about boycott ram cinemas