பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட மூன்று வயது குழந்தை.!! மாற்றம் நம்மில் இருந்து துவங்க வேண்டும்.!! - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனமாக கையாளக்கூடிய கலைகளில் ஒன்றாகும். மேலும் பெற்றோர்கள் வளர்ப்பின் படியே ஒரு குழந்தை சிறந்த மனிதனாக இந்த சமூகத்தில் பிரதிபலிக்க முடியும். குழந்தைகளை பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் எவ்வளவுதான் கவனமாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாலும், அவை எந்த நேரத்தில் என்ன சேட்டை செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. 

அவ்வாறு குழந்தை செய்யும் சேட்டையால் சில சமயங்களில் பெரும் விபரீதமே ஏற்படலாம். எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் எந்நேரமும்  குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒருபுறமிருக்க சில குழந்தைகள் அவர்களின் அறிவார்ந்த செயல்கள் மற்றும் எண்ணத்தால் மக்களின் மனதை வென்று வருகின்றனர். அவ்வாறு உள்ள சில குழந்தைகளின் நகைச்சுவை மற்றும் நல்ல எண்ணத்தை எதிர்பாராத நேரத்தில் காட்சிகளாக பதிவு செய்து இணையத்தில் பெற்றோர்கள் பதிவிடுகின்றனர். 

இது குறித்த வீடியோ பதிவுகள் அவர்களின் பேச்சுக்கள் மற்றும் நல்ல எண்ணங்களை பொறுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிகளவில் இணையத்தில் பரவி., அந்த குழந்தைகள் மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை விதைத்து., அவர்களின் மனதில் வாழ்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே இது போன்ற குழந்தைகளின் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகளவு வைரலாகியது. அதனை போன்று சங்கமா? சாப்பாடா? என்ற கேள்விக்கு சாப்பாடுதான் முக்கியம்., பசிக்குமுள்ள... என்று தனது சுட்டித்தனத்தால் அதிகளவு மக்களை கவர்ந்ததையும் அறிவோம். 

அந்த வகையில்., தற்போது உள்ள இந்த வீடியோ காட்சியில் ஒரு மூன்று முதல் நான்கு வயது வரை இருக்கும் குழந்தையானது பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் தேநீர் குவளைகளை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுகொண்டு உள்ளான். இதனை கவனிக்காத குழந்தையின் பெற்றோர்., இதனை கவனித்து வீடியோ காட்சிகளாக பதிவு செய்ததை அடுத்து., இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக நமது நாட்டில் அதிகளவு குப்பைகள் சாலைகளில் இருக்கும் நிலையில்., கண்களுக்கு தெரிந்த குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போட்ட குழந்தைக்கும்., அந்த குழந்தைக்கு சிறு வயதில் இருந்து நற்பண்பினை கூறி வளர்த்த பெற்றோருக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.... மாற்றம் என்பது நம்மில் இருந்தும்., நாம் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் இருந்து துவங்க வேண்டும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in rajapalayam a child clean waste cup in bus stand for waiting kampam bus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->