அழைப்பு விடுக்கும் காங்கிரஸ்..! கம்பி நீட்ட தயாராகிறதா சிவசேனா?..!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல்கள் அனைத்தும் நிறைவுபெற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில்., எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தனி அந்தஸ்து கிடைக்கவில்லை. மேலும்., பாரதிய ஜனதா கட்சியும் - சிவசேனா கட்சியும் கூட்டணியாக செயல்பட்டு தேர்தலை சந்தித்து வந்த நிலையில்., ஆட்சியமைப்பதில் இழுபறியானது நீடித்து வருகிறது. 

இந்த தருணத்தில்., சிவசேனா கட்சியின் தலைமையில் ஆட்சியை அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுளிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகிவந்த நிலையில்., இது குறித்த தகவலை சிவசேனா கட்சி ஏற்க மறுத்து தெரிவித்தது. 

இந்த சமயத்தில்., நேற்று செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் "நாங்கள் எதிர்க்கட்சியாக பணியாற்ற மக்கள் தீர்மானம் செய்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பாக இருந்தாலும்., பாரதிய ஜனத்த கட்சி ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்த ஒன்றாக வேண்டியது அவசியம்..

இந்த விசயத்திற்கு சிவசேனா கட்சி கட்டாயம் முன்வர வேண்டும்... பாரதிய ஜனதாவுக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ள நிலையில்., இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய சிவசேனா கட்சி முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். மேலும்., சிவசேனாவுடன் தற்போது வரை எந்த விதமான பேச்சுவார்த்தையும் துவங்கவில்லை என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mahrastra congress want help form shiv sena


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->