காதலர் தினத்திற்கு ஆர்கானிக் முருங்கைக்காய்.! முரட்டுசிங்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கிய பல்பொருள் அங்காடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பிப்ரவரி மாதம் என்றாலே இங்கு பல காதல் பிரியர்களுக்கு மனதில் ஆசை துள்ளிக்குதிக்க தொடங்கிவிடுகிறது. இந்த ஒரு மாதத்தில் காதல் பிரியர்கள் அவர்களின் ஆசைகளை தற்போதுள்ள நவீன யுகத்திற்கு ஏற்றாற்போல் மீம்கள் மற்றும் பல விதமான விடீயோக்களை தயார் செய்து இணையத்தில் வளம் வர செய்கின்றனர். 

அதன் படி பிப்.14 ம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில்., இதற்கு முன்னதாக திடீரென இணையத்தில் ப்ரோபோசல் டே மற்றும் பல கொண்டாட்டங்கள் அரங்கேறியுள்ளது. தனது அலைபேசியில் இல்லாத ஒரு தலைப்பட்ச காதலை வாட்சப் ஸ்டேட்ஸில் வைத்து பல முரட்டு சிங்கில்களின் வயிற்றெரிச்சலை வாங்கி கொள்கின்றனர். 

அந்த வகையில்., எந்த விதமான பொழுதுபோக்கு இணையத்தளங்களுள் சென்றாலும் ஒரே காதல் கவிதைகளாகவும்., காதல் பாடல்களாகவும்., பெண் பெயரில் இருக்கும் ஐடி என்றால்., அது பொய்யான ஐடி யா என்று கூட சோதிக்காமல்., பொய்யான ஐடியை பயன்படுத்தும் பலருக்கு வாழ்த்துக்களையும்., காதலை வெளிப்படுத்தியும் வருகின்றனர். 

இவர்களின் தொடர் அட்டூழியம் தாங்க முடியாத முரட்டு சிங்கள் நபர்கள்., அவர்கள் கை வரிசையில் பல மீம்களையும்., விடீயோக்களையும் எடிட் செய்து வெளியிட்டு தங்களின் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில்., எதோ ஒரு முரட்டு சிங்கள் பிரதான பல்பொருள் அங்காடி மையத்தில் செய்த வேலையானது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

அங்குள்ள பல்பொருள் அங்காடி மையத்தில் முருங்கைக்காய் இருக்கும் இடத்தில., காதலர் தினத்தை முன்னிட்டு organic முருங்கைக்காய் என்று எழுதி வைத்துள்ள சுவரொட்டியானது பெரும் வைரலாகி வருகிறது. இதனை பல வித எண்ணத்துடன் "புரிந்தவன் பிஸ்தா" என்றும் பலர் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். மேலும்., காதலர் தினத்திற்கும் முருங்கைக்காய்க்கும் என்ன சம்மந்தம் என்று பலர் தங்களின் மூளையை கசக்கி பிளந்துகொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நமக்கு நமது மனதிற்கு பிடித்த துணை.. உனக்காக பிறந்தவள்/பிறந்தவர் உரிய நேரத்தில் உன்னை வந்து அடைவார்., உனக்கு வழங்க வேண்டியதை யாராலும் எடுத்து செல்ல இயலாது., உன்னை விட்டு செல்ல நினைத்தாலும் அது வேறு வழியில் உன்னையே வந்தடையும்....... அதற்க்காக ஏங்கி நீ செய்யும் ஒவ்வொரு செயலும் பின்னாளில் பல தர்மசங்கடங்களுக்கும்., பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in lovers day festival a shop announce organic drumstick offer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->